பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/642

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

560 அம்புலிப் பருவம் களோடு சேர்க்கப்டாமையும் இவரது சிறப்புக்குச் சிறந்த எடுத்துக் காட்டன்ருே? வள்ளுவர் என்ற பெயர்க்கு ஆராய்ச்சியாளர், திருக் குறள் செல்வத்தைப் பொய்யாமொழியார் தமிழ் மக்களுக்கு அளித்த பெருமைக்குரிய வள்ளல் ஆதலின், வள்ளுவர் எனப் பட்டார் என்று காரணம் கூறுவர். அதுபோல நமது சேக் கிழார் பெருமானர் பெரிய புராணமாம் பெருஞ் செல்வத் தைச் சிறப்பாகச் சைவ மக்களுக்கும் பொதுவாகத் தமிழ் மக்களுக்கும் கொடுத்த பெருவள்ளல் ஆதலின் வள்ளல் எனப்பட்டார். சந்திரன் சிற்சில சமயங்களில் நல்லவன் என்றபெயரை எடுப்பதில்லை. அவனேப் பழித்துப் பேசிய இடங்கள் உண்டு. ஊரைச் சுடுமோ உலகந் தனைச்சுடுமோ ஆரைச் சுடுமோ அறியேனே-நேரே பொருப்புவட்ட மானமுலைப் பூவையரே இந்த நெருப்புவட்ட மான நிலா என்று தனிப்பாடலும். நீங்கா மாயை யவர்தமக்கு நிறமே தோற்றுப் புறமேபோய் ஏங்காக் கிடக்கும் எறிகடற்கும் எனக்கும் கொடியை ஆனயே ஓங்கா நின்ற இருளாய்வந் துலகை விழுங்கி மேல்மேலும் விங்கா நின்ற கருநெருப்பின் இடையே எழுந்த வெண்ணெருப்பே என்று கம்பராமாயணமும் சந்திரனே நல்லோன் அல்லன் என்று கூறுவதை அறிக. நமது சேக்கிழார் என்றும் நல்லோரே. வான் ஆகாயமாகும். அஃது உயர உள்ளது. வானவர் ஆவார் உயர்ந்தவர். அவர்கள் தேவர்கள். அம்முறையில் சேக்கிழார் உயர்ந்தவர், தேவரும் ஆவர். ஆகவே, ஆவர்