பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/645

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமபுலிப் பருவம் 563 குரிய பல சிறப்புக்களில் ஒன்று திருவிழாக்கள் அடிக்கடி நிகழ்வதாகும். ஆகச் 'சாறுசால்வீதி' என்றனர். இறை வனது நடனத்திற்கு ஒய்வில்லை. அவன் நடனம் செய்தலை நிறுத்தின், உலகம் அசைவின்றி நின்றிடும். உலக அசைவு நின்ருல் உயிர்களின் அசைவும் இல்லை. எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம் எங்கும் சிவமாம் இருத்தலால் எங்கெங்கும் தங்கும் சிவனருள் தன்விளை யாட்டதோ தேவர் சுரர்நரர் சித்தர்வித் தியாதரர் மூவர்கள் ஆதியில் முப்பத்து மூவர்கள் தாபதம் சத்தர் சமயம் சராசரம் யாவையும் ஆடிடும் எம்மிறை ஆடவே படங்கொடு நின்றஇப் பல்லுயிர்க் கெல்லாம் அடங்கலும் தாமாய்நின் முடுகின் முரே என்று திருமந்திரம் இறை நடம், அற்புத நடனமாகி யாவும் ஆட ஆடும் நிலையினே அறிவிக்கிறது. சேக்கிழார் பெருமாருைம் 'ஆதியும் முடிவும் இல்லா அற்புதத் தனிக் கூத்து' என்றனர். இடைவிடாது இறைவன் நடம் புரிகின்றனர் என்ற கருத்தில்தான் மணிமொழியாரும், 'நள்ளிருளில் நட்டம் பயின்ருடும் நாதனே' என்றனர். இந்த உண்மையினை மேற்கு நாட்டவரும், இக்கால நவின ஆங்கிலம் படித்த இந்தியரும் நமது இறைவனல்தான் இவ் வுலகில் ஒவ்வோர் அணுவும் அசைகின்றது என்று ஆணித் தரமாக எழுதியுள்ளனர். “The Universe is consisted of atoms and all the atoms move in a hy: himic dances”—Prof Hakkal. “Lord Siva dancing in the heart of the universe and in my own heart —Roman Rolle. “ she Sports in the world. He sports in the Soul.” The whole universe is bright with his smile and alive with his joyous movements.