பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/655

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புலிப் பருவம் 573 சிறந்தவன். ஆதிசேடன்தான் வடமொழி இலக்கணம் செய்த பாணினி முனிவர் என்றும் கூறுவர். பாணினி சிவ பெருமானிடம் வடமொழி இலக்கணம் பயின்றவர். இதனைச் சிவஞான முனிவர், 'வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி' என்றும் கூறியுள்ளனர். இதல்ை ஆதிசேடன் பேரறிவு படைத்தவன் என்பது தெரிகிறது. 'அத்தகைய பெரிய அறிஞனும், பாம்பரசனுமான ஆதிசேடனும் சேக் கிழார் மன்றின் எதிரே வருவற்கு அஞ்சுவன். அத்தகைய மாண் புடையவர் சேக்கிழார். நீ ஒரு சிறு பாம்பால் அலைக் கழிக்கப் படுபவன்' என்றனர் ஆசிரியர். சேக்கிழார் அருகு வருவற்கு ஆதிசேடன் அஞ்சும் காரணம், தம் அறிவினும் சேக்கிழார் அறிவு விஞ்சி இருப்பதளுல் என்க. இதனை உமாபதி சிவம் 'சிதைவற ஆயிரநாவுள சேடவி சேடனும் ஒப்பல்ல* குன்றமுனிக்கு” என்று அறிந்து கூறியவற்ருல் அறிக. இதனை உட்கொண்டே 'எங்கள் கோமான் பெருங் கல்வி ஆட்சியை உணர்ந்து" என்றனர் பாம்பின் முடியில் மணி உண்டு என்பதைக் சேக்கிழார் 'முழை அரவு உமிழ்ந்த செய்ய பணிவெயில்' என்றதையும், 'அருமை மணியும் அளித்ததுவே நஞ்சும் அளிக்கும் அரவு' என்றதையும் காணவும். இதல்ை மணிச்சூட்டு என்றனர். ஆதிசேடன் தலைகள் அடர்ந்து இருத்தலின் காடு என்றனர். பணம் --அடவி-பணுடவி பணம் = படம், அடவி = காடு. சந்திரன் திருப்பாற்கடல் கடைந்த ஞான்று அதில் தோன்றினன் என்பது புராணமரபு ஆதலின், ஒருபரவை நினே இலகுவே ஈன்றது என்றனர். பரவை கடலாகும். சிறிதளவேனும் உன்னை மதியேன் என்ற கருத்தில் நெல் நுனியை உவமை காட்டினர். மேலும், திருப்பாற்கடல் கடைந்தபோது, காமதேனு, கற்பக விருட்சம், இலக்குமி முதலானவர்கள் தோன்றியது போல நீயும் தோன்றியதால், அஃது உன்னே இலேசாக ஈன்றது. அதல்ை தனிச் சிறப்பு உனக்கு உண்டாகாது.” என்ற கருத்தில்தான் ஆசிரியர், 'ஈன்றது இலகுவே பாரம் என நெல்துணைத்தனையும் எண்