பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/706

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

624 சிற்றில் பருவம் அண்ட வாணர்எதிர் தெண்டன் ஆக அனை வரும்வி ழுந்துபின் எழுந்துசீர் கொண்ட சேவைகுல திலக ருக்கனவு ருங்கு றித்தெதிர் கொடுத்தபேர் தொண்டர் சீர்பரவு வார்.எ னப்பெயர் சுமத்தி ஞானமுடி சூட்டிமுன் மண்ட பத்தினில் இருத்தி மற்றவரை வளவர் பூபதி வணங்கினன். என்று பாடியுள்ளமையால் அறியலாம். சேக்கிழார் ஒரு ஞான சூரியர் ஆதலின், 'படி கொள்விண் மணியாய்” என்றனர். விண்மணி என்பது ஆகாயத்தில் ஒளிவிடும் சூரியன் ஆவான். அவன் பூமியில் வருதல் இல்லை. அப்படி அவன் வந்தால் எப்படியோ அப்படிச் சேக்கிழார் பூமியில் ஞான சூரியனுய் விளங்கு தலின் 'படிகோள் விண்மணியாய்' என்றனர். இஃது இல் பொருள் உவமை அணி. சேக்கிழார் அன்பர்களின் அஞ்ஞான இருளை நீக்கி மெய்ஞ்ஞான ஒளியினைத் தருபவர் என்பதை அவரே தமது நூலின் சிறப்பைக் கூறும்போது, இங்கிதன் நாமம் கூறின் இவ்வுல கத்து முன்னுள் தங்கிருள் இரண்டின் மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற பொங்கிய இருளை ஏனைப் புறஇருள் போக்கு கின்ற செங்கதி ரவன்போல் நீக்கும் திருத்தொண்டர் புராணம் என்பாம் என்று குறிப்பிட்டிருப்பதைக் காண்க. நூலினைச் சூரியனுகக் குறிப்பிட்டதனால் அந்நூலே யாத்த ஆசிரியரும் கதிரவன் தானே? இங்ஙனம் புலவர்கள் தம்மையும் தம் நூலையும் புகழ்தல் மரபோ எனச் சிலர் ஐயம் கொள்ள லாம். ஐயங்கொன்ருதற்கு இடமே இல்லை. இலக்கணத்தில் இதற்கு விதியும் உண்டு. இதனே,