பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/705

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றில் பருவம் 623 மன்னன் உலகிற்கு உயிராகித் தாங்குதலின், "தாங்கும் வளவன்' என்றனர். கம்பரும் தயரதன் உலகுய்யக் கருணைத் தாங்கிக் காத்தமையினை, வயிரவான் பூண்அணி மடங்கல் மொய்ம்பினுன் உயிரெலாம் தன் உயிர் ஒப்ப ஒம்பலால் செயிர்இலா உலகினில் சென்று நின்றுவாழ் உயிர்எலாம் உறைவதோர் உடம்பும் ஆயினுன் என்ருர். அனபாயச் சோழன் சேக்கிழாரைத் தொண்டை நாட்டி னின்றும் வரவழைத்துத் தன் கண்மணியினும் சிறப்பாகப் போற்றியதால், 'அனபாயன் கண்மணியாய்' என்றனர். மன்னன் வரவழைத்த தோடின்றித் தனது ஆத்தானத்தில் தலைமை அமைச்சுப் பதவியினையும் ஈந்தனன். அமைச்சுப் பதவி ஈந்ததோடின்றி, உத்தமச் சோழ பல்லவன் என்ற பட்டத்தையும் ஈந்தனன். இதனே உமாபதி சிவனர், அத்தகைய புகழ்வேளாண் மரபில் சேக்கி ழார்குடியில் வந்த அருள் மொழித்தே வர்க்குத் தத்துபரி வளவனும்தன் செங்கோல் ஒச்சும் தலைமைஅளித் தவர் தமக்குத் தனதுபேரும் உத்தமச்சோ ழப்பல்ல வன்தான் என்றும் உயர்பட்டம் கொடுத்திட ஆங்கவர்நீர் நாட்டு நித்தனுறை திருநாகேச் சுரத்தில் அன்பு நிறைதலினல் மறவாத நிலைமை மிக்கார் என்றதும் காண்க. அனபாயனுக்குச் சேக்கிழார் சூளா மணியாய், அதாவது முடிமணியாய்த் திகழ்ந்தார் என்பது, அவரது திருவடிகளை வணங்கிப் போற்றியதல்ை அறிகிருேம். இதனையும் உமாபதியார்,