பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/749

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. ஓங்குமுனி வரர் இகுவர் கைகுவித் தரமுழக் குறஎழுப் பிக்களிக்க உலகமுழு தீன்றசிவ காமவல் லித்தாய் உலோசனம் விடுத்துநிற்கப் பாங்குபுனை செம்பொன்அம் பலநடனம் நவிலும் பரஞ்சோதி மதுவொழுக்கும் பச்சைத் துழாய்அண்ணல் மத்தள முழக்கினும் பரவுபேர் உவகைபூப்ப வாங்குதிரை யால்பாலி வீசு செம் மணியும்வெள் வயிரமும் கரைவிராவ வண்படுகர் மேயும்வளை கோட்டெருமை அதுகண்டு வாய்வெரீஇ ஒட்டெடுக்கும் தேங்குதிரு வம்பரவு துண்டிர வளநாட சிறுபறை முழக்கியருளே தென்றலங் கன்றுலவு மன்றஒண் குன்றைமுனி சிறுபறை முழக்கிஅருளே (அ.செ.) ஒங்கு-பெருமையில் ஓங்கிய, முனிவரர் இருவர்-இரண்டு முனிவர்களான வியாக்கரபாதரும், பதஞ் சலி முனிவரும், உலோசனம்-கண், விடுத்துநிற்க-விழித்துப் பார்க்க, பாங்கு-அழகுற, உற-மிகவும். புனை-அலங்கரிக்கப் பட்ட, நவிலும்-நடத்தும், பழகும், பரஞ்சோதி-பேரொளிப் பிழம்பாகிய இறைவர், மது-தேன், பச்சைத் துழாய் அண்ணல்-பசுமையான துளசிமாலை அணிந்த அண்ணலாகிய திருமால், பரவு-போற்றும், உவகை-மகிழ்ச்சி பூப்பஉண்டாக்க, வாங்குதிரை-வளைந்து வளைந்து வரும் அலை, மடிந்து வரும் அலே, பாலி-பாலாறு, வளைகொம்பு-வளைந்த கொம்பு, வெரீஇ-பயந்து, ஒட்டெடுக்கும்-ஒட்டம் பிடிக்கும், திருவம்-செல்வம், படுகர்-மருதநிலம், தேங்குதல்-நிறைதல். விளக்கம்; நடராசப் பெருமானே எப்போதும் வணங் கும் பேறு பெற்ற முனிவர்கள் ஆதலின், ஒங்கு முனிவர்