பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் வரலாறும் காலமும் లిFré வேண்ட, அவரும் அதற்கு உடன்பட்டு நூற் பொருளை நன்கு விளக்கினர். மன்னன் பெரிதும் மகிழ்ந்தான். ஏனையவரும் சேக் கிழாரது அடியார் பக்தியையும் அளவிறந்த கல்வியின் சிறப் பையும் போற்றிப் புகழ்ந்தனர். அரசன் சேக்கிழார்க்குத் தொண்டர் சீர் பரவுவார் என்ற பட்டத் தினேயும் ஈந்தனன் பெரியபுராணமாம் திருத்தொண்டர் புராணத்தைச் சைவத் திருமுறைகள் பதினென்றுடன் பன்னிரண்டாவது திருமுறை யாகச் சேர்த்துப் பெருமை கொண்டனன். சேக்கிழார் பெருமாளுரும் கூத்தப் பெருமானுக்குத் திருத்தொண்டு புரிந்து அப்பெருமானரது திருவடி நிழலில் சேர்ந்து இன் புற்றனர், காலம்: சேக்கிழார் பெருமாளுர் திகழ்ந்த காலம் கி. பி. 12-ஆம் நூற்ருண்டாகும். சேக்கிழார் பெருமாளுர் இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்து இருந்தவர் இவனது காலம் கி. பி. 1123-1 48. இவனே அநபாயன் என்ற பெயருடையவன். இக்கருத்தை வரலாற்று அறிஞர் களும் கல்வெட்டு அறிஞர்களும் ஒருசேர ஒவ்வியுள்ளனர். பொதுக் குறிப்பு: தெய்வப் புலவர் என்ற சிறப்புப் பெயர் பெற்ற திருவள்ளுவர்போல, நம் சேக்கிழார் பெரு மாஞரும் தெய்வப் புலவர் என்ற பெருமைக்குரியவர். வேறு எவரும் இப்பெருமைக்கும் பட்டத்துக்கும் உரியவர்கள் அல்லர். சேக்கிழார், திருவள்ளுவரது பெருமை கூறும் திருவள்ளுவ மாலைபோலச் சேக்கிழார் பிள்ளைத் தமிழ் என்ற நூலைப் பெற்ற பெருந்தகையார். தம் மீது உமாபதி சிவம் பாடிய தனித் புராணத்தையும் பெற்றவர். இவ்விரு நூற் களும் நூலாசிரியரையும், நூலையும் புகழ்ந்து பேசுவன. ஆனால், திருவள்ளுவ மாலே பல புலவர்களால் பாடப்பட்ட நூற் தொகுப்பாகும். சேக்கிழார் பிள்ளைத் தமிழ் ஒருவரால் புகழப்பட்ட பெருமையுடைய நூலாகும். என்ருலும்,