பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/779

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுபறைப் பருவம் 697 இறைவனது திருவருட் பெற்றவர்களின் அருட் கவிகளின் பொருள்களை எல்லாம் தம் நூலில் புகுத்திப் பாடல்களைப் பாடி இருத்தலின லும், இவரது பாடல் அருட்கவிதானே! 'ஐந்து பேர் அறிவும்” என்று தொடங்கும் இவரது பாடல், குமர குருபர சுவாமிகட்கு ஞானசாரியானது திருவருள் உண்டாகத் துணையாய் நின்றது என்பதை உணரும்போது, இவரது கவிகள் அருட்கவிகள்தாமே! வேறு என்ன வேண்டும் இவர் அருட்கவி பாடிய புலவர் என்பதற்கு.? அனபாயச் சோழன் கடலில் பெரியது எது? மலையில் பெரியது எது! உலகில் பெரியது எது? என்று தன் அவைக்களப் புலவர்களைக் கேட்டபோது, அங்கிருந்த புலவர்கள் எவரும் அவ்வினுக்களுக்கு விடை தர இயலாது விழித்த போது, நமது சேக்கிழார் பெருமான் அல்லரோ! பயன் தூக்கார் செய்த உதவி நயன்துக்கின் நன்மை கடலில் பெரிது ' என்றும், நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்' மலையின் மாணப் பெரிது ' என்றும், 'காலத்தி ல்ைசெய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது ' என்றும், விடை இறுத்தனர்! ஆகவே, இவர் பெரும் புலவர் தாமே! எனவே, திரு பிள்ளை அவர்கள் சேக்கிழாரைப் புலவன்' என்றனர். (87)