பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/780

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. அத்தி தருங்கவி என்மரும் நன்ற அறைகுதிர் அம்மட்டோ அவாவிய புத்தி தருங்கவி என்மரும் அதுமட் போஇன்னும் சித்தி தருங்கவி என்மரும் எல்லாத் தீர்த்தங் களும் உறுயா செய்யாச் சுத்தி தருங்கவி என்மரும் செப்பிய அம்மட்டோ பத்தி தருங்கவி என்மரும் ஆகிப் பாரிற் புலவர்ளலாம் பல்லா ருேதுபு பாராட் பக்கதி பற்றிய பல்லோர்க்கும் முத்தி தருங்கவி பாடிய புலவன் முழக்குக சிறுபறையே முழுமணி மாட்க் குன்றத் தூரன் முழக்குக சிறுபறையே (அ.சொ.) அத்தி-உண்டு என்னும் பொருளது, அறை குதிர்-சொன்னிர், அத்திரும் கவி-ஆஸ்திகம்தரும் கவி, உலகர் உண்டு என்று அறிவிக்கும் கவி, அதாவது-கடவுள் உண்டு, சீவான்மா உண்டு, மறுபிறவி உண்டு, நல் வினே, தீவினைப் பயன்கள் உண்டு என்று நிலை நிறுத்தும் பாடல்கள், பாரில்உலகில், ஒதுபு-சொல்லி, புத்தி-ஞானம், அவாவியவிரும்பிய, சித்தி-வேண்டியதை வேண்டியாங்கு பெறும் பேறு, பரலோக சித்தி, உறுமா-உறுமாறு, பல்லாறு-பல விதம், கதி-நற்கதி, பற்றிய-விரும்பிய. விளக்கம்: இக்கவியிலும் திரு பிள்ளையவர்கள் சேக்கிழா ரின் செய்யுள் சிறப்பை விளக்கி உள்ளனர். சேக்கிழார் கவிகளில் எல்லார்க்கும் எவை எவை தேவை என்பது படு கிறதோ, அவை எல்லாம் உண்டு என்னும் முறையில் பெரிய புராணத்தில் கவிகள் அமைந்துள்ளன.