பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார்9

தம் ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டு அங்குப் பொழுது போக்கினர். அவர்களே தங்கள் நாட்டை இருபத்து நான்கு கோட்டங்களாக வகுத்துக் கொண்டார்கள். அக் குறும்பர் காவிரிப்பூம்பட்டினத்து வணிகருடன் கடல் வாணிபம் நடத்தினர். பிற்காலத்தில் ஆதொண்ட சக்கரவர்த்தி என்பவன் குறும்பரை வென்று நாட்டைக் கவர்ந்தான். அன்று முதல் அந்நாடு அவன் பெயரால் ‘தொண்ட நாடு’ என வழங்கலாயிற்று”[1] என்பது செவிவழிச் செய்தியாகும்.

2. “கரிகாற் சோழன் தொண்டை நாட்டைக் கைப்பற்றிக் காடு கெடுத்து நாடாக்கினான். பிறகு தொண்டைக் கொடியால் சுற்றப்பட்டுக் கடல் வழிவந்த (நாகர் மகளுக்கும் சோழ மன்னனுக்கும் பிறந்த) இளந்திரையன் என்பவன் -ஆண்டதால், குறும்பர் நாடு ‘தொண்டை நாடு’ எனப் பெயர் பெற்றது” என்று தமிழ் நூல்கள் கூறுகின்றன்.

கரிகாலன் - இளந்திரையன்: ‘தொண்டை நாடு’ என்ற பெயர் எக்காரணம் பற்றி வந்தது என்பது இப்பொழுது திட்டமாகக் கூறுதற்கில்லை; ஆனால் சங்க காலத்தில் அந்நாடு சோழர் ஆட்சியில் இருந்தது என்பதை மட்டும் திட்டமாகக் கூறலாம். கி.பி. முதல் நூற்றாண்டினன் என்று கருதத்தகும் “கரிகாலன் இமயம் செல்லும்பொழுது வேடன் ஒருவன் எதிர்ப்பட்டுக் காஞ்சி நகரத்தின் சிறப்பைக் கூற, அச்சோழர் பெருமான் காஞ்சி நகரைத் தனதாக்கிக் குன்று போன்ற மதிலை எழுப்பினான்; தொண்டை நாட்டில் பலரைக் குடியேற்றினான்” என்பது பெரிய புராணக் . கூற்றாகும். “இளந்திரையன் என்பவன் காஞ்சியைத், தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை ஆண்டு வந்தான்; அவன் பாண்டவரைப் போலப் பகைவரை வென்றவன். தொண்டையர் குடியிற் பிறந்தவன். பகைவர்


  1. R. Gopalan's Pallavas of Kanchi, pp. 26 - 27