பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார்

101

யாவும் சிறப்பிக்கின்றன. இத்தகைய பேரரசனைப் பற்றிச் சேக்கிழார் கூறும் வரலாற்றுக் குறிப்புகள்ல் மாறானவை என்று ஒதுக்கத் தக்கவை இல்லை என்னலாம்.

பிற சோழ மன்னர்கள்.புகழ்ச்சோழர் முதலிய சோழ மன்னர்களைப்பற்றி அறியத்தக்க இலக்கியமோ, பிற சான்றுகளோ இன்று கிடைக்குமாறில்லை. ஆயின், இவர்களைப்பற்றிச் சேக்கிழார் கூறும் விவரங்களோ பலவாகும். சோழர் அமைச்சரான அவர், சோழ அரசர் செய்திகளை அச் சோழர் மரபினரைக் கேட்டே எழுதியிருப்பார் எனக் கொள்ளலே நேர்மையான முடிபாகும்.

ஐயடிகள் காடவர்கோன்.இவர் வடமொழிதென்மொழிகளில் சிறந்த புலவர் வடபுலம் கைக் கொண்டவர். தம் மகனிடம் அரசை ஒப்புவித்துச் சிவத்தல யாத்திரை செய்தவர் ஒவ்வொரு தலம் பற்றியும் ஒரு வெண்பாப் பாடினார்' என்பது சேக்கிழார் கூறும் செய்தியாகும்.

இக்குறிப்பு கல்வெட்டைக் கொண்டு மெய்ப்பிக்கக் கூடவில்லை. சேக்கிழார் காலத்தில் இக் காடவர்கோன் மரபில் வந்த பல்லவன்-மோகன் ஆட்கொல்லி என்பவன். அவன் சோழப் பேரரசில் உயர் அலுவலாளனாக இருந்தான். அவனுடைய முன்னோரும் சோழப் பேரரசில் பங்குகொண்டு இருந்தனர். ஆதலின், அவனது மரபினருள் முன்னோரான ஐயடிகள் வரலாற்றுக் குறிப்புகள் அவன் வழியாகச் சேக்கிழார் அறிந்திருத்தல் கூடும், ஐயடிகள் பாடிய கூேடித்திர வெண்பா, சேக்கிழார் காலத்தில் முழுவதும் இருந்திருக்கலாம். இதன் பாயிரத்தில் ஐயடிகள் வரலாறு சுட்டப்பெற்றிருக்கலாம். இவ்விரண்டில் ஒன்றன் மூலமாகவே சேக்கிழார் ஐயடிகளைப்பற்றிய குறிப்புகளைத் தொகுத்தார் எனக் கோடலே பொருத்தமானது.