பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார்

103

1.'மகாமாத்திரர் என்பவர் அரசியல் மந்திராலோசனைச் சபையினர்.அரசர் இவர்களைக் கலந்தே யுத்த யாத்திரை செய்வதும் வேறு செயல்களிற் புகுவதும் வழக்கம் என்பது சாணக்கியர் பொருள் நூல் புகலும் விளக்கமாகும். 'இம்மகாமாத்திரர் பல கலைகளில் வல்லவராகவும் சிறந்த போர் வீரராகவும் நற்குடிப் பிறப்புடையவராகவும் இருத்தல் வேண்டும்'என்பது மதுதர்ம சாத்திரக்கூற்றாகும். சேக்கிழார் கூறும் சிறுத்தொண்டர் இலக்கணம், சாணக்கியர் பொருள் நூலுக்கும் மதுவின் விதிக்கும் ஒத்திருத்தல் கண்டு மகிழத்தக்கது.

2. வாதாபியைத் துளாக்கிச் சாளுக்கியரை ஒடுக்கிப் பதின்மூன்று ஆண்டுகள் தன் ஆட்சியில் வாதாபியை வைத்துக்கொண்ட புகழுடையவன், முன் சொன்ன மகேந்திரன் மகனான நரசிம்மவர்மன் ஆவன். எனவே, அவனிடமே சிறுத்தொண்டர் சேனைத் தலைவராக இருத்தனராதல் வேண்டும். நரசிம்ம பல்லவன் வாதாபியைப் பிடித்த காலம் ஏறத்தாழ கி.பி. 642. அவனது ஆட்சியில் அத்தொன்னகரம் இருந்த காலம் கி.பி. 642655 ஆகும் என்பது வரலாற்று ஆசிரியர் கருத்தாகும். இங்ங்னம்பல்லவரால் தமது பண்டை நகரம் பாழானதால், தங்கள் பெருஞ் சிறப்புக்கு இழுக்கு ஏற்பட்டது என்று சாளுக்கியரே புலம்பினர் என்பதற்கு அவர்தம் பட்டயங்களே போதிய சான்றாகும். இங்ங்னம் கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் கொண்டே அறியத் தக்க வாதாபிப் படையெடுப்பைச் சேக்கிழார் பெருமான் சிறுத்தொண்டர் வரலாற்றிற் செருகியுள்ளனர் எனின் அவரது வரலாற்றுப் புலமையையும் நுண்ணிய அறிவையும் என்னெனக் கூறி வியப்பது!