பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

சேக்கிழார்

3.கணபதீச்சரம் என்பது திருச்செங்காட்டங்குடியில் உத்தராபதிசர் கோவிலுக்குள் சிறிய கோவிலாக இருக்கின்றது. இதன் சுவர்களிற்றாம் சோழர் காலத்துக் கல்வெட்டுகள் காணக் கிடைக்கின்றன. இக்கோவிலைத் தன் அகத்தே பெற்ற உத்தராபதிசர் கோவிற் சுவர்களில் சோழர் கல்வெட்டுகள் இல்லை. எனவே, சிறுத்தொண்டர் காலத்தில் இன்றைய பெரிய கோவில் இல்லை என்னலாம். முதல் இராசராசன் காலம் முதல் கணபதிச்சரம் சிறப்புறத் தொடங்கியது. அங்குச் சித்திரை விழா ஆண்டுதோறும் கொண்டாடப் பட்டது. அப்போது அடியாரை உண்பிக்கச் 'சிறுத்தொண்ட நம்பி மடம்' கட்டப்பட்டது.“சிறுத்தொண்டர். 'சிராளதேவர் என்ற பெயர்கொண்ட சிவபிரானுக்கும் வீரபத்திரர்க்கும் தொண்டு செய்து வந்தவர்” என்று கல்வெட்டுகள் குறிக்கின்றன. உத்தராபதி யார் சிறுத்தொண்டர் மாளிகையின் உபசரிக்கப்ட்டார் படவே, அம்மாளிகை இருந்த இடமே நாளடைவில் உத்தராபதிசர் கோவிலாக மாறி இருக்கலாம். 'சிறுத்தொண்டர் வரலாற்றில் உள்ள தெய்விகச் செயல் ஒழிந்த ஏனைய அனைத்தும் இங்ங்னம் கல்வெட்டுச் சான்று கொண்டனவாகக் காண்கின்றன.

நெல்வேலி வென்ற நெடுமாறன்: சம்பந்தரால் சைவ மதம் புகுந்த நெடுமாறன் நாட்டை நன்னெறியில் ஆண்டுவருங்கால், வடபுலத்துப் பெருமன்னன் ஒருவன். கடல் போன்ற தானையுடன் வந்து பாண்டி நாட்டை எதிர்த்தான் இருதிறத்தார் படைகளும் திறம்படப் போரிட்டன. யானைகள் யானைகளுடன் போரிட்டன. குதிரைகள் குதிரைகளுடன் போரிட்டன. வீரர் வீரருடன் போரிட்டனர். வடபுலத்து முதல் மன்னன் படை


A.R.E 1913. II.P.P. 87-88


A.R.E 1913. II.P.P. 87-88