பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

சேக்கிழார்

இடம் நெல்வேலி என்பது. பல நாட்களாகப் பல இடங்களில் பல்லவப் படைகளுடன் போர் நடத்திய சாளுக்கியர் படை, பாண்டியர் படைக்கு ஆற்றாது. முறிந்தது. இறுதியில் பாண்டியன் வெற்றி பெற்றான்.

பல்லவர் - சாளுக்கியர் போர் II: பாண்டியர்சாளுக்கியர் போர் நடந்துகொண்டிருந்தபொழுதோ அல்லது பாண்டியர் வெற்றிக்குப் பிறகோ அறியோம்: வடக்கு நோக்கி ஓடிய பல்லவன் பெருஞ் சேனையைத் திரட்டிக் கொண்டு வந்து சாளுக்கியனைத் திடீரெனத் தாக்கினான் போர் கடுமையாக நடந்தது. வெற்றி மகள் எவர் பக்கம் சேருவாளோ என்று ஐயுறத்தக்கவாறு ஒருகால் பல்லவர்க்கு வெற்றி, மற்றொருகால் சாளுக்கியர்க்கு வெற்றி கிடைத்து வந்தது. இறுதியில் பெருவள நல்லூர் என்ற இடத்தில் பல்லவன் வெற்றி பெற்றான். சாளுக்கியன் முற்றிலும் முறியடிக்கப்பட்டுக் கந்தையாடையுடன் தப்பி ஒடினான் என்று பரமேச்வரவர்மனது கூரம் பட்டயம் அறிவிக்கின்றது.

நெல்வேலிப் போரில் நெடுமாறனுக்குத் துணையாக அவன் மகன் கோச்சடையன் பங்கெடுத்துக் கொண்டு ரண ரசிகன்’ என்ற விக்கிரமாதித்தனை வென்றதால், தன்னை 'ரண திரன்’ என்று அழைத்துக்கொண்டான். இங்ங்னமே பரமேச்வரனுக்குத் துணை சென்ற அவன் மகனான இராச சிங்கன், தன்னை 'ரண ஜயன் என்று அழைத்துக் கொண்டான்.

நெல்வேலிப் போரின் முக்கியத்துவம். விக்கிரமாதித்தன் முதலில் பரமேச்வரனைத் தோற்கடித்து அவனது பெருநாட்டைக் கைப்பற்றிக் கொண்டான்.தெற்கே


சோழ மண்டலத்துத் தென்கரைப்பனையூர் நாட்டு நெல்வேலி நாட்டு நெல்வேலி - 276 of 1916


சோழ மண்டலத்துத் தென்கரைப்பனையூர் நாட்டு நெல்வேலி நாட்டு நெல்வேலி - 276 of 1916