பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார்

107

இருந்த பாண்டிய நாடும் அவன் படைக்கு இரையாகி இருக்குமாயின், விந்தமலை முதல் கன்னிமுனை வரை சாளுக்கியர் பேரரசு நிலைபெற்றுவிடும். சாளுக்கியன் நெடுமாறனைப்போல அழுத்தமான சைவன் என்று கூற முடியாது. ஆதலின் சாளுக்கியன் வெற்றி சைவத்தின் வெற்றியாகாது. சமணத்திலிருந்து பாண்டிய நாட்டை மீட்கச் சம்பந்தர் அரும்பாடுபட வேண்டியவரானார். அங்ங்னம் அரும்பாடுபட்டு நாடும் அரசனும் சைவமயமான பிறகு, இப்பெரும் போர் நிகழ்ந்தது. சைவத்தில் அழுத்தமான நெடுமாறன் வெற்றியே தமிழ்நாட்டில் சைவம் வளரத் துணை செய்யும் மேலும், நெடுமாறன் தமிழன். ந்ெல்வேலிப்போரில் பாண்டியன் சாளுக்கியனை எதிர்த்திராவிடில், பின்னர் நடந்த பெருவள நல்லூர்ப் போரில் சாளுக்கியனைப் பல்லவன் வென்றிருத்தல் இயலாது. எங்ங்ணம் பார்ப்பினும், நெல்வேலி வெற்றி தமிழ்நாட்டு உரிமைக்கும் சைவசமய வளர்ச்சிக்கும் உயிர் நாடி போன்றதாயிற்று. இந்த முக்கியத்துவத்தை நாட்டு, மக்கள் நன்குணர்ந்து 'நெல்வேலி வென்ற நெடுமாறன் என்று பாண்டியனை வழிவழியாகப் பாராட்டி வந்தனர் . போலும் அப்பாராட்டின் பொருட்சிறப்பை நெல்வேலிப் போருக்கு ஏறத்தாழ 170 ஆண்டுகட்குப் பின் வந்த சுந்தரர் நன்குணர்ந்து, தமது திருத்தொண்டத் தொகையில் அவனது பக்திச் சிறப்பைப் பாராட்டாமல்,

"நிறைக்கொண்ட சிந்தையால் நெல்வேலி வென்ற
நிறன்சிர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்."

என்று பாண்டியனது போர்ச்சிறப்பு ஒன்றையே பாராட்டி ஏத்தெடுப்பாராயினர் என்பது இங்கு நுட்பமாக உணரத்தக்தது.