பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார்

109

வியந்து திருநின்றவூருக்கு விரைந்து சென்று பூசலாரைச் சந்தித்து அவரது அகக்கோவிற் சிறப்பை அறிந்து மீண்டான். அப்பல்லவன் தான் கட்டிய கோவிலுக்குப் பெருஞ் செல்வத்தை வைத்தான்.அது சேக்கிழார் கூறும் புராண வரிவரமாகும்.

அசரீரி கேட்டமை. இராச சிங்கன் கட்டிய கயிலாசநாதர் கோவில் வடமொழிக் கல்வெட்டு ஒன்றில், “சென்ற யுகத்தில் துஷ்யந்தன் அசரீரி கேட்டதாகப் படித்திருக்கிறோம். ஆனால் இந்தக் கொடிய கலியுகத்தில் இராச சிங்கன் அசரீரி கேட்டது வியப்பே' என்ற குறிப்பு காணப்படுகின்றது. இக் கல்வெட்டுச் செய்தியைக் கொண்டே பல்லவன் கனவு கண்டதாகச் சேக்கிழார் கூறியுள்ளார் என்பது ஆராய்ச்சியாளர் கருத்தாகும்.

பூசலார் கோவில். பூசலார் மனத்தில் எடுத்த கோவிலின் அடையாளமாகச் சிவன் கோவில் ஒன்று நின்றவூரில் இருக்கின்றது. அஃது ஆராய்ச்சிக்கு உரியது.அக்கோவிலைச் சுற்றிலும் இராச சிங்கன் காலத்துக் கற்றுாண்கள் சிதைந்து காணப்படுகின்றன. கோவில் பல்லவர் காலத்துக் கோவில், அதன் வெளிமண்டபத்தில் இராச சிங்கன் உருவச்சிலை இருக்கின்றது. மூலத்தானத்தில் லிங்கத்திற்கு எதிரில் பூசலார் உருவச் சிலை இருக்கின்றது. கோவிலில் உள்ள் லிங்கத்திற்கு 'மனக்கோவில் கொண்டார்'என்னும் பெயர் வழங்குகிறது.

கச்சிக் கற்றளி. காஞ்சிபுரத்தில் முதற் கற்கோவிலாகக் காட்சியளித்தது இராச சிங்கன் கட்டிய கயிலாசநாதர் கோவிலே ஆகும். அஃது அழிவுற்ற இந்நிலையிலும் பார்ப்பவர் வியக்கத்தக்கவாறு காட்சி அளிக்கின்றது எனின்,


நான் அதனை நேரிற் சென்று கவனித்தேன்.


நான் அதனை நேரிற் சென்று கவனித்தேன்.