பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

சேக்கிழார்

இராச சிங்கன் காலத்தில் எவ்வளவு சிரும் சிறப்பும் பெற்றதாக இருந்திருத்தல் வேண்டும்! அக்கோவிலுக்கு சிங்கன் பெருஞ் செல்வம் வைத்திருந்தான் என்று சேக்கிழார் கூறியுள்ளார். அவர் கூற்று உண்மை என்பதைச் சாளுக்கியர் கல்வெட்டுகள் குறிக்கின்றன.

1. “இரண்டாம் விக்கிரமாதித்தன் காஞ்சியைக் கைப்பற்றிய பிறகு, இராச சிம்மேச்வரத்தின் (கயிலாச நாதர் கோவிலின்) பெருஞ் செல்வத்தைப் பார்வையிட்டு மகிழ்ந்தான் அதனை அக் கடவுளுக்கே விட்டு மகிழ்ந்தான்” என்று இரண்டாம் விக்கிரமாதித்தனது (கயிலாசநாதர் கோவிலில் உள்ள) கன்னடக் கல்வெட்டு அறிவிக்கிறது.

2. "காஞ்சியைக் கைப்பற்றிய இரண்டாம் விக்கிரமாதித்தன் இராச சிம்மேச்வரத்துப் பெருஞ் செல்வத்தைக் கண்டு வியந்தான்; அதனை அக்கோவிலுக்கே விட்டு மகிழ்ந்தான்” என்று அவனது துேர்ந்துார்ப் பட்டயம் குறிக்கின்றது.

3. “காஞ்சியைக் கைப்பற்றிய இரண்டாம் விக்கிரமாதித்தன் இராச சிம்மேச்வரத்தின் பெருஞ் செல்வத்தைக் கைக்கொள்ளாது, அங்குள்ள விக்கிரகங் களைப் பொன்மயமாக்கி மீண்டான்” என்று வக்கலேரிப் பட்டயம் கூறுகிறது.

வியப்பினும் வியப்பு.இத்தகைய பெருஞ்செல்வம் கொண்டு வியத்தகு முறையில் சிறப்புற்று விளங்கிய கற்றளி, முதற் குலோத்துங்கன் காலத்தில் தன் சிறப்பை இழந்தது. அக்கோவில் மூடப்பட்டது. அதற்குரிய நிலங்கள் விற்கபட்டன. கோவில் திருச்சுற்றுகள். திருமடைவிளாகம் முதலியன பக்கத்தில் உள்ள அனைய பதங்காவுடையார் கோவிலுக்குத் தரப்பட்டன. இவ்வாறு சிறுமையுற்று மூடப்பட்ட கோவில் ஏறக்குறைய 200 ஆண்டுகள் கழிந்த