பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார்

111

பிறகே விசயநகர ஆட்சியின் போது திறக்கப்பட்டதாக அக்கோவில் கல்வெட்டே கூறுகின்றது. எனவே, சேக்கிழார் காலத்தில் அக்கோவில் மூடப்பட்டுக் கிடந்தது. திருச்சுற்று, திருமடை விளாகம் முதலியன இன்றி இழிநிலையில் இருந்தது என்பது தெளிவு.அங்ங்னம் இருந்தும், கால உணர்ச்சியும் வரலாற்று நுட்பமும் உணர்ந்த சேக்கிழார், அது கட்டப்பட்டபோது இருந்த சிறப்பைக் கல்வெட்டுகளைக் கொண்டு ஆராய்ந்தும், காஞ்சியில் இருந்த சான்றோர் வாயிலாகக் கேட்டும் உண்மையை உணர்ந்த பிறகே,

"காடவர் கோமான் கச்சிக் கற்றளி எடுத்து முற்ற
மாடெலாம் சிவனுக் காகப் பெருஞ்செல்வம் வகுத்தல் செய்தான்”

என்று தெளிவாக அதன் சிறப்பினைத் தாம் நேரிற் கண்டார்போல அழுகுபடக் கூறியுள்ளார். இங்ங்ணம் அவர் வரலாற்று உண்மை உணர்ந்து பாடியிருத்தல் வியப்பினும் வியப்பே அன்றோ?

கழற் சிங்கன்.இவன் மூன்றாம் நந்திவர்மன் என்று அறிஞர் ஆராய்ந்து கூறியிருத்தல் பொருத்தமானது' இவனைப்பற்றிச் சேக்கிழார் கூறும் செய்திகள் கல்வெட்டுகளையும் பட்டயங்களையும் நந்திக் கலம்பகத்தையும் கொண்டே கூறத் தக்கவையாக இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாக இங்குக் காண்போம்.

1.இவன்,“சிவனை வழிபட்ட சிறந்த பக்தன்” என்பது பெரிய புராண்க் கூற்று. இவன் 'சிவனை முழுதும் மறவாத சிந்தையன்' என்று நந்திக்க்லம்பகம் நவில்கின்றது. இவன்.


இதுபற்றிய விளக்கம் எனது "பெரியபுராண ஆராய்ச்சி” என்னும் பெரிய நூலிற் காண்க.