பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

¤

சேக்கிழார்

“நெற்றியில் நீறு தரித்தவன் பல சிவன் கோவில்கட்குப் 'பல திருப்பணிகள் செய்தவன்” என்று கல்வெட்டுகள் குறிக்கின்றன.

2."இவன் வடபுலத்தைச் சிவபிரான் அருளால் வென்றான்” என்பது பெரியபுராணச் செய்தி. இதனை நந்திக்கலம்பகமும் ஒப்புகிறது. இவனது வேலூர்ப் பாளையப் பட்டயமும் இதனைக் குறிப்பாக உணர்த்துகின்றது.

3.இவன்,"நாடு அறநெறியில் வைக நன்னெறி வளர்த் தான்” என்பது சேக்கிழார் வாக்கு 'நந்திவர்மன் (கழற் சிங்கன்) ஆட்சிக் காலத்தில் - வசந்தகாலம் மிகுதியாக விளக்க முற்றது போலவும், உயர்குடி மக்கள் நற்பண்புகளுடன் விளங்கினாற் போலவும், பெண் மணிகள் கற்பரசிகளாகத் திகழ்ந்தாற் போலவும், செல்வர் ஈகைக் குணத்துடன் வாழ்ந்தார் போலவும், அறிஞர் அடக்கத்துடன் விளங்கினார் போலவும், திருக்குளங்கள் தாமரையுடன் திகழ்ந்தார் போலவும்-நந்திவர்மன் தன் குடிமக்களுடன் விளக்க முற்றிருந்தான்” என்பது வேலூர்ப் பாளையப் பட்டயக் கூற்றாகும்.

4.இவன்,"பல கோவில்கட்குத் திருப்பணிகள் செய்தவன்” என்பது சேக்கிழார் கூற்று. இதனையே திருவொற்றியூர், திருவதிகை, திருவிடைமருதூர்க் கல்வெட்டுகளும் வேலூர்ப்பாளையப் பட்டயமும் உறுதிப் படுத்துகின்றன.

5.இவனுக்கு உரிமை மெல்லியலார் (சிலர் அல்லது பலர்) இருந்தனர் என்ப்து சேக்கிழார் வாக்கு.

இவனுக்கு இரட்ட அரசனான அமோகவர்ஷ நிருபதுங்கன் மகளான சங்கா என்பவள் பட்டத்தரசியாவள்:சிவபக்தி மேற்கொண்டு சிவப்பணிகள் செய்து வந்த மாறன் பாவை என்பவள் ஒருமனைவி என்று பாகூர்ப்பட்டயமும் கல்வெட்டுகளும் கூறுகின்றன.