பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



டாக்டர் இராசமாணிக்கனார்
121

பாராட்டப் பெற்ற நாயன்மார் வரலாறுகளை இந்நான்கு பகுதிகட்கும் இடையிடையே வைத்தும் பாடியிருத்தல். சுந்தரர் புராணமே - திருத்தொண்டர் புராணம் என்ற கொள்கையை வற்புறுத்துவதாகும். பெரியபுராணத்திற்குத் திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் இட்ட பெயர் ஆகும். திருத்தொண்டர் புராணம், சுந்தரர் புராணம் ஆயின், 'திருத்தொண்டர் என்ற பெயர் சுந்தரர்க்கு உரியதாதல் வேண்டும். இங்ங்னம் சேக்கிழார் உரிமையாக்கினரா? ஆம். அவர், தடுத்தாட்கொண்ட புராணத்தில் சுந்தரரை. “சைவமுதல் திருத்தொண்டர் தம்பிரான் தோழனார் நம்பி’ என்று தெளிவாகத் தெரிவித்துள்ளார். எனவே, திருத்தொண்டர் புராணம் சுந்தரர் - புராண்மே என்பது இதனாலும் அறியப்படும். < >பெரிய புராணம் பெருங்காவியமா? பெருங்காவியத்திற்குச் சிறப்பு இலக்கணங்கள் சில உண்டு.

1. நூல் முழுவதும் சிறப்புடைத் தலைவன் ஒருவனைப் பற்றியே பேசப்படல் வேண்டும்.

2. பெருங்காவியம் சருக்கம், படலம், இலம்பகம் என்ற பிரிவுகளில் ஒன்றைப் பெற்றதாக விளக்குதல் வேண்டும். 3. அஃது அறம், பொருள். இன்பம், வீடு என்ற நான்கு பேறுகளை உணர்த்துவதாக இருத்தல் வேண்டும்.

4 மலை, கடல், நாடு. நகர் பருவகாலங்கள் (பெரும் பொழுதுகள்) சிறு பொழுதுகள் ஆகியவை பேசப் பெற்றனவாக இருத்தல் வேண்டும்.

5. பலவகை விளையாட்டுகள். பிள்ளை வளர்ச்சி முதலியன கூறப்பட்டிருத்தல் வேண்டும். -

இவை அனைத்தும் பெரிய புராணத்துள் இடம் பெற்றுள்ளனவா?