பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



120

சேக்கிழார்

சென்றார். தேவாசிரிய மண்டபத்திற் குழுமி இருந்த நாயன்மார்களைக் கண்டார். அவர்களைப் பாட விழைந்தார். இறைவன் ஆணையும் பிறந்தது. சுந்தரர், “தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்." என்று தொடங்கித் தனியடியார் அறுபத்து, மூவரையும் தொகை அடியார் ஒன்பதின்மரையும் பாராட்டித் திருதொண்டத் தொகை பாடினார். இது சுந்தரர் வாழ்க்கையிற் சிறப்புடைய நிகழ்ச்சியாகும். (2) பிறகு சுந்தரர் பல தலங்களைத் தரிசித்துக் கொண்டு திருவொற்றியூரை அடைந்தார் சங்கிலியாரை மணந்தார். கண் இழந்து தல யாத்திரை செய்து கண் பெற்றார் திருவாரூரை அடைந்து பரவையாரைச் சமாதானப்படுத்தி வாழ்ந்தார் ஏயர்கோன் கலிக்காமனார் தம்மிடம் கொண்டிருந்த வெறுப்டை விருப்பாக மாற்றினார். (3), சேரமான் பெருமாள் நாயனார். சுந்தரர் நட்பைப் பெறத் திருவாரூரை அடைந்தார். அவருடன் பல தலங்களைத் தரிசித்தார். சுந்தரர் அவருடன் கூடிச் சேரநாட்டை அடைந்தார்; அங்குள்ள சிவத் தலங்களைத் தரிசித்து. மீண்டார். (4) இறுதியிற் சுந்தரர் சேரநாடு அடைந்து திருவஞ்சைக் களத்திலிருந்து வெள்ளானை மீது புறப்பட்டுக் கயிலை சென்றார் சேரமான் குதிரை மீது அவரைப் பின் தொடர்ந்தார். சுந்தரர் வாழ்க்கைப் பிரிவுகளாகிய இந்த நான்காம் நூலின் முதலில் (1) தடுத்தாட் கொண்ட புராணம் என்ற பகுதியிலும், நூலின் இடையில் (2) ஏயர்கோன் கலிக்காம் நாயனார் புராணம் என்ற தலைப்பிலும், (3) சேரமான் பெருமாள் புராணம் என்ற வரலாற்றிலும், நூலின் இறுதியில் (4) வெள்ளானைச் சருக்கம் என்ற தலைப்பிலும் முறையே கூறப்பட்டுள்ளன. சேக்கிழார். சுந்தரர் புராணத்தை இங்ஙனம் நூலின் முதல், இடை, கடை என்னும் மூன்று பகுதிகளிலும், அவராற்.