பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார்

119


அதிகம் அறைவதேன்? சேக்கிழார், சிறுத் தொண்டர் வரலாற்றில் வாதாபிப்போரைக் குறித்திரா விடில், நாம், சம்பந்தர் காலம் அறிந்திருந்தால் இயலாது. அங்ஙன மே, பல்லவன் 'குணபர ஈச்வரம்'எடுத்தான் என்பதைச் சேக்கிழார் குறியாதிருப்பின், அப்பர் காலத்துப் பல்லவன் மகேந்திரவர்மனே என்பதை உறுதி செய்திருக்க முடியாது. சேக்கிழார் சிறந்த வரலாற்று உணர்ச்சி கொண்ட பெரும் புலவர் என்பதை வரலாற்று உலகிற்கு எடுத்துக்காட்ட இந்த இரண்டே போதும். கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் இத்தகைய வரலாற்று உணர்ச்சியுடைய பெரும் புலவரைப் பெற்றிருந்த தமிழகத்திற்கு நமது வணக்கம் உரியதாகுக.


9. சேக்கிழார் பெரும் புலமை

பெரியபுராணம் - சுந்தரர் புராணம். நாயன்மார் அறுபத்து மூவர் வரலாறுகள் பெரும்பாலும் தனித்தனியானவை ஒன்றேடொன்று தொடர்புடையன அல்ல. ஆயின், அப்பர் சம்பந்தர் சமகாலத்தவர் பதினொருவர் சுந்தரர் சமகாலத்தவர் பதின்மூவர். ஏனையோர் அனைவரும் தனித்தனிக் காலத்தவர் என்று கொள்ளலாம். தம்மை ஒழிந்த62 நாயன்மார் பெயர்களையும் சிலருடைய சிறப்பியல்புகளையும் தொகுத்துப் பாடித் திருத்தொண்டர் பெயர்ப் பட்டியலைத் தயாரித்துத் தந்தவர் சுந்தரர். சுந்தரர் வரலாறே முக்கியமானது. (1) அவரது வரலாற்று நிகழ்ச்சிகளில், ஒன்று அவர் பரவையாரை மணந்தமை. அவர் அவ்வம்மையாரை மணந்த பிறகு அக்கோலத்துடன் திருவாரூர் வீதிவிடங்கப் பெருமான் கோவிலுக்கு அரச மரியாதையுடன் ஊர்வலமாகச்