பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118 [] சேக்கிழார்

கொள்ளவில்லை. சேக்கிழார் இக்கல்வெட்டைப் படித்திராவிடில், மநுச்சோழன் வரலாற்றை இவ்வளவு விளக்கமாகப் பாடியிருந்தல் இயலாதென்னலாம்.

முடிவுரை: இங்ஙனம் வரலாற்றுச் சிறப்புடைய நாயன்மார் வரலாறுகள் அனைத்தையும் இலக்கியமும் கல்வெட்டும், நம்பத்தக்க செவிவழிச் செய்தியும் கொண்டு சேக்கிழார் பாடியுள்ளார் என்பதனை. ஒவ்வொரு நாயனார் வரலாறாக எடுத்துக் கொண்டு சான்றுகள் காட்டிக் கொண்டே போகலாம். அவ்விரிவிற்கு இஃது இடமன்று. சேக்கிழார் கூறும் பேரரசர்.சிற்றரசர் பற்றிய குறிப்புகள், நாயன்மார் காலத்தில் நடந்த் பல்லவர் - பாண்டியர் போர்.பாண்டியர்-சாளுக்கியர் போர், பல்லவர் -இரட்டர் போர், பல்லவர் சோழ பாண்டியர் போர் என்பனவும்: அப்பர் - சம்பந்தர் காலத்து மிழலைப் பஞ்சம், பூசலார் காலத்துப்பல்லவ நாட்டுப்பஞ்சம், கோட்புலியார் (சுந்தரர்) காலத்துத் தமிழ் நாட்டுப் பஞ்சம் என்பனவும் வரலாற்றுப் புகழ் பெற்றவை. அவை பற்றிச் சேக்கிழார் கூறியுள்ள அனைத்தும் உண்மை என்பதைப் பல்லவர் காலத்துக் கல்வெட்டுகள் கொண்டு மெய்ப்பிக்கலாம்.

இங்ஙனமே நாயன்மார் காலத்துக் கடல் வாணிகம். மறையவர் சிற்றுார்கள் (பிரம்மதேயங்கள்), கிராம் நீதி மன்றங்கள், கணவன், அரசன் ஆகிய இவருடன் முறையே மனைவி, மெய்காப்பாளர் இறத்தல், நாயன்மார் காலத்தில் வாழ்ந்த பலவகைச் சிவனடியார், அவர்தம் இலக்கணங்கள் ன்ன்பனவும் வரலாற்றுச் சிறப்புடைய பிறவும் இலக்கியமும் கல்வெட்டுகளும் கொண்டு மெய்ப்பிக்கலாம்."

5.இவை பற்றிய விரிவை என்து"பெரிய புராண ஆராய்ச்சி" என்னும் பெரிய - நூலிற் காண்க. - - -