பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார் 117

“மநுச்சோழன்மகன் பெயர் 'ப்ரியவ்ரதன்' அமைச்சன் 'இங்கணாட்டுப் பாலையூர் உடையான் உபயகுலாமலன்' என்பவன். அவன் அரசனது கட்டளையை நிறைவேற்ற மனம் வராது தற்கொலை செய்து கொண்டான். இறுதியில் அவ்வமைச்சன், பசுக்கன்று, அரசிளங்குமரன் ஆகிய மூவரும் சிவபிரான் அருளால் உயிர் பெற்று எழுந்தனர். மநு தன் மகனை அரசனாக்கி, அமைச்சன் மகனான சூரியன் என்பவனை அம்மகனுக்கு அமைச்சனாக்கித் தானும் உயிர் பெற்றெழுந்த அமைச்சனும் தவநிலை மேற்கொண்டனர். மநு, தன் அமைச்சனுக்குப் பரிசாகத் தந்த திருவாரூரில் இருந்த மாளிகை ஒன்று. அவன் மரபில் வந்தவனும் விக்கிரமசோழனது அமைச்சனுமான பாலையூர் உடையான் சந்திரசேகரன் ஆதிவிடங்கனான குலோத்துங்கசோழ மகாபலி பாணராயனுக்கு உரியது. அது பழுதுபட்டுக் கிடந்ததால், அதனைப் பழையபடி மாளிகையாக்கிக் குடிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.” இந்த விவரங்கள் எல்லாம் சிவபெருமான் திருவாரூர் மாகேச்வரர்க்கும் கோவில் ஆதிசைவர்க்கும் அருளியபடி கல்லில் வெட்டப்பட்டனவாம்.

சேக்கிழார்க்கு ஏறத்தாழ 12 ஆண்டுகட்கு முற்பட்ட இக்கல்வெட்டு மிகவும் முக்கியமானது. இதனால், விக்கிரம சோழன் காலத்தில், மநுச்சோழன் வரலாறு திருவாரூர் மக்கள் அளவிலேனும் தெரிந்திருந்தது என்னலாம். கல்வெட்டுச் செய்திகள் பழைய காலத்தன. ஆயினும், அதிற் கூறப்பட்டுள்ள 'ப்ரியவ்ரதன்'போன்ற பெயர்கள் பிற்காலத்தனவாகும். இந்த உண்மையை உணர்ந்தவர் சேக்கிழார். அதனாற்றான்;இக்கல்வெட்டிலிருந்து தமக்கு வேண்டிய முக்கியமான நிகழ்ச்சிகளை மட்டும்.எடுத்துக் கொண்டாரே யன்றிப் பெயர்களை எடுத்துக்