பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



124

சேக்கிழார்

5. பலவகை விளையாட்டுகள். பெண் மக்கள் விளையாடும் பந்தாட்டம், அம்மானை. கழங்கு, ஊசல், சிற்றில் அமைத்து விளையாடல் போன்ற பலவகை விளையாட்டுகள், மானக்கஞ்சாறர் புராணத்தும் சம்பந்தர் புராணத்தும் காணலாம். ஆண் மக்கள் விளையாட்டுகள் கண்ணப்பர், திருநாளைப் போவார், சம்பந்தர் புராணங்களிற் கண்டு களிக்கலாம். -

பிள்ளை வளர்ச்சி. (1) ஆண்பால் வளர்ச்சியைச் சம்பந்தர். கண்ணப்பர் புராணங்களிற் காணலாம். (2) பெண் பால் வளர்ச்சியைச் சம்பந்தர், காரைக்கால் அம்மையார், மானக்கஞ்சாறர் புராணங்களிற் கண்டு இன்புறலாம். இவ்வளர்ச்சி முறைகளை பிள்ளைத் தமிழ் நூல்களிற் கூறப்படும் இலக்கண் முறைக்கு ஒத்திருந்தல் படித்து இன்புறத்தக்கது.

இங்ஙனம் ஒரு பெருங்காவியத்திற்கு உரிய இலக்கணங்களை எல்லாம் தன் மாட்டுச் சிறக்கப்பெற்று விளங்குவது சேக்கிழார் பாடியருளிய பெரிய புராணம் ஆதலின். அப்பெருநூல் பெருங்காவியம் என்று தாராளமாகச் சொல்லலாம். இதுவே சேக்கிழார் கருத்துமாகும் என்பதற்கு அவரது பாயிரம் சான்றாதல் காணலாம். சேக்கிழார், 'எடுக்கும்மாக்கதை என்ற பெரிய புராணத்தைக் குறிக்கின்றார். இதனால் அஃது உதயணன் வரலாறு உரைக்கும் 'பெருங்கதை' என்ற 'கொங்கு வேள் மாக்கதை' போன்றதொரு காவியம் என்பது பொருளாகுமன்றோ? . . . -

சேக்கிழார் பல்கலைப் புலவர். இங்ஙனம் பெரியதொரு காவியம் பாடிய சேக்கிழார் பெரும்புலவர் என்பதை அவரது பெருங்காவியம் நன்கு விளக்கி நிற்கின்றது. அவர் (1)தமிழ் நூல்களில் நிரம்பிய புலமை