பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126 சேக்கிழார்

அகநானூறு. கண்ணப்பர் புராணத்தில் இரும்புலி எயிற்றுத் தாலி (செ9) என்றமை, “புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி” (செ. 7) என்னும் அக நானூற்று அடியுடன் ஒன்றுபடல் உணரலாம். - நற்றிணை. கண்ணப்பருடன் வேட்டையாடச் சென்ற நாய்கள் தம் நாக்களை நீட்டியும் சுருக்கியும் தொங்கவிட்டுக் கொண்டு ஓடின. அக்காட்சி, வேடரது வில்மீது பொருந்தும் வெற்றி மகளது சிவந்த பாதம் முன்போய் நீள்வது போலக் காணப்பட்டது என்ற (செ. 69) கருத்து.

'முயல்வேட் டெழுத்த முடுகுவரிசைக் கதநாய்

தன்னாப் புரையும் சிறடி என்ற நற்றிணைச் செய்யுள் (252) அடிகளிற் பார்க்கலாம். ஐங்குறுநூறு. திருநீலகண்ட நாயனார் பரத்தை வீட்டிலிருந்து மீண்டதை உணர்ந்த அவர் மனைவியார், அவரோடு உடனுறைதலை விரும்பாராய்த் தம்மைத் திண்டலாகாது என்று ஆணையிட்டனர். இக்கருத்து,

“என்னலம் தொலைவதாயினும்

துன்னேம் பெரும, பறாத்தோய்ந்த மார்பே, என்ற ஐங்குறுநூற்றுப் பாவடிகளின் பொருளோடு ஒத்துவருதல் காணத்தக்கது.

கலித்தொகை. மானக்கஞ்சாற் நாயனார் புராணத்தில் (செ. 11) கூறப்பட்டுள்ள

'மழைக்குதவும் பெருங்கற்பயின் மனைக்கிழத்தி,' என்ற தொடரின் கருத்தும் “வான்தரு கற்பனான்.”

“அருமழை தரல்வேண்டில் தருகிற்கும் பெருமையளே”