பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

128 சேக்கிழார்


சிலப்பதிகாரம். பெரிய புராணத்துள் இசைபற்றி வரும் இடங்கள் பலவாகும். அவற்றுள் சிறந்த பகுதி ஆனாய நாயனார் புராணத்தில் உள்ளது. இசைபற்றி வரும் இவ்விடங்களிற் கூறப்படும் செய்திகள் அனைத்தும் சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை அடிகளிலும் அவைபற்றிய அடியார்க்கு நல்லார் உரையிலும் விளக்கமாகக்காணலாம். இஃதன்றிக் கரிகாலன் இமயம் சென்று அதன் மீது புலிப்பொறி பொறித்து மீண்ட செய்தியைச் சேக்கிழார் திருக்குறிப்புத் தொண்டர் புராணத்திலும், புகழ்ச்சோழர் புராணத்திலும் கூறினமை, சிலப்பதிகார (இந்திரவிழவூர் எடுத்த காதையில் வரும்) அடிகட்கும் அவற்றின் உரைக்கும் பொருத்தமாதல் காணத்தக்கது. மணிமேகலை. பெரிய புராணத்திற் பெளத்த சமயத்தைப்பற்றி வரும் சம்பந்தர். புராணம் முதலிய இடங்களிற் காணப்படும் பெளத்த சமயக் குறிப்புகள் பல. மணிமேகலை என்னும் பெளத்த காவியத்திற் காணக்கிடக்கின்றன. ஆதலின். காலத்தால் முற்பட்ட இதனைச் சேக்கிழார் கவனித்தவர் என்பதில் ஐயமில்லை

சேக்கிழார், நாட்டுச் சிறப்பில் (செ.2). அகத்திய முனிவன் கமண்டலத்திலிருந்து கவிழ்ந்த நீரே காவிரியாறாகப் பெருக்கெடுத்தது என்று குறிப்பிடும் செய்தியை

அமர முனிவன் அகத்தியன் தனாது
கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை.

எனவரும். மணிமேகலை அடிகளிற் காணலாம்.

சிந்தாமணி. சேக்கிழார் சிந்தாமணியைச் சிறக்கப் படித்த சீரிய புலவர் என்பதனை முன்னரே குறிப்பிட்டோம் அல்லவா? அதற்குச் சான்றுகள் பல காட்டலாம். இ. மஞ்சி இரண்டு காட்டுதும்.