பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார் 129

1. பசிய வயல்களுக்கு இடையில் உள்ள தாமரை மலர்கள்மீது சங்குகள் இருத்தல் - ஊர்கோளால் (பரிவேடம்) சூழப்பட்ட சந்திரனின் தோற்றத்தை ஒத்திருந்தது - திருக்குறிப்புத் தொண்டர் புராணம், செ.26 இந்த உவமை,

"கட்டமுற் கதிரை ஊர்கோள் வளைத்தவா வளைத்துக்

-கொண்டார்” என்று சிந்தாமணியில்(செ1186) ஆளப்பட்டிருத்தல் காண்க 2, கண்ணப்பர் சிவனைவிட்டு நீங்காமையைக் கண்ட நாணன்,

'வங்கினைப் பற்றிப் போதா வல்லுடு பென்ன நீங்கான்” என்று. (செ.116) கூறிய உடும்பைப்பற்றிய உவமையே சிந்தாமணியில்,

'தணக்கிறப் பறித்த போதும் தானளை விடுத்தல்

செல்லா

நிணப்புடை உடும்பன்னாரை."

என்று (செ2887) கூறப்பட்டிருத்தல் காணத்தக்கது. தொல்காப்பியம்: முல்லை நிலத்திற்குக் கடவுள் திருமால். இதனைத் தொல்காப்பியர்,

“மாயோன் மேய காடுறை உலகம்” என்று கூறிப் போந்தார். இதனையே சேக்கிழார் . திருக்குறிப்புத் தொண்டர் புராணத்தில்,

'முல்லையின் தெய்வமென் றருந்தமிழ் உரைக்கும் செங்கண்மால் " என்று விளங்கவுரைத்திருத்தல் காண்க, ஐந்திணைச் சிறப்பு. திணை மயக்கம், பெரும்பொழுது சிறுபொழுதுகள், காதலர் களவு நிலை முதலிய பற்றிவரும் பெரியபுராணச் செய்திகட்கு இலக்கணம் தொல்காப்பியமே என்னலாம்