பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14 சேக்கிழார்

மிகவும் பழுதுபட்டுக் கிடக்கிறது. அது சேக்கிழார் கோவிலுக்கு நேர் எதிரில் இருக்கின்றது. இவ்விரண்டு கோவில்களிலும் மூன்றாம் இராசராசன் கல்வெட்டுகளும் பிற்கால் நாயக்க மன்னர் கல்வெட்டுகளும் காண்கின்றன. நத்தத்தின் உள்ள தெருக்களும் இல்லங்களும் பள்ளங்களும் மேடுகளும் தம் பழைமையைப் புன்முறுவலோடு உணர்த்திநிற்றலை ஆராய்ச்சியாளர்தாம் அறிதல் கூடும். சேக்கிழார் கோவிலுக்கு அண்மையில் ஒரு குளம் இருக்கின்றது. வயல்கள் செம்பரம்பாக்கத்து ஏரிப்பாய்ச்சலைப் பெற்றுச் செழித்துள்ளன. நத்தம் மலை மீதுள்ள முருகர் கோவில் சொக்கநாத நாயக்கர் காலத்தது கி.பி. 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிற் கட்டப்பட்டது. எனவே, சேக்கிழார் காலத்தது அன்று.

ஊரின் பண்டை நிலைமை: நத்தம் கல்வெட்டுகளைக் கொண்டும் சேக்கிழார் கட்டியதாகக் கூறப்படும் திருநாகேச்சரம் கோவிற் கல்வெட்டுகளைக் கொண்டும் காண்கையில் அப்பதி, சோழர் காலத்தில் பெரிய நகரமாக இருந்தது. சைவ வைணவக் கோவில்கள் நன்னிலையில் இருந்தன. கோவில் காரியங்களைக் கவனிக்கச் சபையார் இருந்தனர்: ஊர் ஆட்சியை நடத்த ‘ஊரவர்’ எனப்பட்ட ‘ஊர் அவையார்’ இருந்தனர் என்பன போன்ற செய்திகளை நன்கறியலாம்.

2. சேக்கிழார் - முதல் அமைச்சர்

சேக்கிழார் குடி: தொண்டை நாட்பை வளப்படுத்தி நாற்பத்தெண்ணாயிரம் குடிகளை அந்நாட்டிற் குடிபுகச் செய்த முயற்சி சோழன் கரிகாலனுக்கு உரியது என்று சேக்கிழார் புராண ஆசிரியர் கூறியுள்ளார். அக்குடிகளுள்


Inscriptions 177 to 179; 183 and 18% of 1929 - 30