பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16சேக்கிழார்


கல்வெட்டுச் செய்திகளால் நன்கறியலாம். மேலும் இச்செய்திகளால், சேக்கிழார் குடியினர்.சோழ மன்னரால் ‘சோழ முத்தரையன்’ முதலிய பட்டங்கள் தரப் பெற்று உயர் நிலையில் வாழ்ந்தவர் என்பதும் புலனாதல் காண்க.

குன்றத்தூர்ச் சேக்கிழார் குடியினர். இதுகாறும் கிடைத்துள்ள கல்வெட்டுகளைக் காண்கையில், குன்றத்தூர்ச் சேக்கிழார் மரபினர் இரண்டாம் குலோத்துங்கன் (பெரியபுராண ஆசிரியர்) காலமுதலே விளக்கம் பெறலாயினர் என்பது தெளிவாகத் தெரிகிறது. சேக்கிழார் புராண ஆசிரியரும் இதனையே குறித்து, ‘அநபாயன் காலமுதல் சேக்கிழார் குடியின்ர் அரசியலில் உயர்ந்த பதவிகள் வகித்து வந்தனர். இன்றும் வகித்து. வருகின்றனர்’ என்று தம் காலம் வரை சேக்கிழார் மரபினர் சிறப்பைக் குறித்துள்ளார். அவரது இக்கூற்று உண்மை என்பதைக் கிழ்வரும் கல்வெட்டுச்செய்திகளால் அறியலாம்:

அரசன் பெயர் கல்வெட்டுக் காலம் சேக்கிழார் குடியினர்
1. இராசராசன் II (கி.பி.1116-1173) கி.பி.1162 சயங்கொண்ட சோழ மண்டலத்துக் குலோத்துங்க சோழ வளநாடான புலியூர்க் கோட்டத்துக் குன்றத்தூர் நாட்டுக் குன்றத்தூர்ச் சேக்கிழான் மாதேவடிகள் ராமதேவன் என்ற உத்தமசோழப் பல்லவராயன்.