பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார்27

வளர்ச்சியுற்று இருந்தது. அது (1) சங்க காலத்தில் எப்படி இருந்தது. (2) நாயன்மார் காலமான பல்லவ மன்னர் காலத்தில் எவ்வாறு இருந்தது. (3) பிறகு சோழ வேந்தர் காலத்தில் எவ்விதம் வளர்ச்சியுற்றிருந்தது. இவ்வளர்ச்சி அவர் பெரிய புராணம் பாட எந்த அளவு துணைபுரிந்தது என்னும் செய்திகளை இனி அடுத்துவரும் பகுதிகளிற் காண்போம்.

3. சைவ சமய வரலாறு

(சங்க காலம்)

முன்னுரை. உலகச் சமயங்களுட் பழைமையானவை. சில. அச் சிலவற்றுள் ஒன்று சைவ சமயம் என்பது சர். ஜான் மார்ஷல் போன்ற புதைபொருள் ஆராய்ச்சியாளர் கருத்து. ரிக்வேத காலத்துக்கும் முற்பட்டது சைவ சமயம் என்பது மொஹெஞ்சொ-தரோ. மெசோபொடேமியா, கிரீட் எகிப்து, மால்ட்டா முதலிய இடங்களிற் கிடைத்த சிவலிங்கங்களால் வெளியாகிறது என்பதும் அன்னோர் கருத்தாகும். இச்சைவ சமயம் வேத காலத்தில் விளக்க முற்றிருந்தது என்பது வேதங்களால் விளங்குகிறது. பின்னர் மகாபாரதம் - இராமாயணம் போன்ற இதிகாச காலத்தில் மேலும் வளர்ச்சியுற்றிருந்தது என்பதற்குரிய சான்றுகள் இதிகாசங்களிற் காணலாகும். இவ்வளர்ச்சி படிப்படியாக முதிர்ந்தமைக்கு உரிய சான்றுகள் வடமொழிப் புராணங்களிற் புலனாகின்றன. அப்பண்டைக் காலத்திலேயே நம் நாட்டில் சிவ வணக்கத்துக்குரிய கோவில்கள் பல இருந்தன தீர்த்தங்கள் இருந்தன. மக்கள் இவ்விரண்டிற்கும் யாத்திரை செய்தனர். சிவபிரான் ஏனைய தேவர்க்கும் மேலானவன் என்ற பொருளில் ‘மகா