பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார்

29


“பிறவா யாக்கைப் பெரியோன் கோவிலும் அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோவிலும்
வால்வளை மேனி வாலியோள் கோவிலும்

நீலமேனி நெடியோன் கோவிலும்.....”

என வரும் சிலப்பதிகார அடிகளால் அறியப்படும்.

கோவில்கள். இக் கோவில்கள் சில இடங்களில் ‘மாளிகை’ எனவும் பெயர் பெறும். தெய்வக் கோவிலும் அரசன் கோவிலிலும் மண்டபங்கள் உண்டு. இவை யாவும் சிற்ப வல்லுநரால் நாள் குறித்து, நாழிகை பார்த்து, தேரறி கயிறிட்டுத் திசைகளையும் அத்திசைகளில் நிற்கும் தெய்வங்களையும் நோக்கி வகுக்கப்பட்டன என்பது,

“ஒருதிறம் சாரா வரைநாள் அமையத்து
நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத்
தேஎங் கொண்டு தெய்வம் நோக்கிப்
பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து"

நெடுநல்வாடை

என வரும் அடிகளாலும்,
“அறக்களத் தந்தணர் ஆசான் பெருங்கணி
சிறப்புடைக் கம்மியர் தம்மொடும் சென்று
மேவோர் விழையும் நூல்நெறி மாக்கள்
பால்பெற வகுத்த பத்தினிக் கோட்டம்”

சிலப்பதிகாரம்

என வரும் அடிகளாலும்,

“பைஞ்சேறுமெழுகாப் பசும்பொன் மண்டபம்”

என வரும் மணிமேகலை அடியாலும் நன் குணரலாம். கடைசியிற் கூறிய மண்டபம் பல நாட்டுக் கட்டடத்திறனாளருடன் தண்டமிழ் வினைஞர் சேர்ந்து சமைத்த அற்புத மண்டபம் என்று மணிமேகலை