பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார் 43

நந்திவர்மன் (790-840). இவன் பல்லவ மல்லன் மகன் பரம பாகவதன் எனினும், இவன் காலத்தில் சிவன்கோவிற் பணிகள் நடந்தவண்ணம் இருந்தன. இவன் காலத்துப் பணிகளுட் சிறப்பாகக் குறிக்கத் தக்கது கச்சித் திருமேற்றளிக் கோவிலுக்கும் அதனைச் சார்ந்த மடத்திற்கும் முத்தரையன் ஒருவன் பொருள் உதவி செய்ததாகும். இதனால், தமிழ் நாட்டில் தேவார காலத்திற்றானே கோவில்களை அடுத்து மடங்கள் இருந்தன என்பது உண்மையாதல் காணலாம். இக்கால நாயன்மார். அப்பர்-சம்பந்தர்க்கு முற்பட்ட நாயன்மார் 17பேர் அப்பர்-சம்பந்தர் காலத்தவர் 11 பேர் சுந்தரர் காலத்தவர் 13 பேர். எனவே, அப்பர்சம்பந்தர்காலத்திற்கும் சுந்தரர் காலத்திற்கும் இடைப்பட்ட நாயன்மார் 22 பேர் ஆவர். அவராவார் - (1) பூசலார் நாயனார், (2) காரி நாயனார், (3) அதிபத்த நாயனார், (4) கலிக்கம்ப நாயனார், (5) கலிய நாயனார், (6) சத்தி நாயனார், (7) வாயிலார் நாயனார், (8) முனையடுவார் நாயனார் (9) இடங்கழி நாயனார், (10) இயற்பகை நாயனார், (11) நேச நாயனார். (12) இளையான்குடி மாற நாயனார், (13) மெய்ப்பொருள் நாயனார், (14) திருநாளைப்போவார் நாயனார், (15) ஏனாதிநாத நாயனார், (16) ஆனாய நாயனார். (17) உருத்திரபசுபதி நாயனார். (18) திருக்குறிப்புத்தொண்ட நாயனார். (19) மூர்க்க நாயனார், (20) சிறப்புலி நாயனார். (21) கணநாத நாயனார்; (22) திருநீலகண்ட நாயனார் என்பவர்.

டாக்டர் இராசமாணிக்கனார் 145