பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார் 45

2. பல கோவில்களில் நடனக்கலை கவனிக்கப்பட்டது; 3. கோவில்களில் விழாக்கள் நடைபெற்றன. 4. சைவ சமய நூல்கள் பல இருந்தன; வேறு பல கலைகளைப்பற்றிய நூல்களும் இருந்தன.

5. கோவில்களில், பண்டாரம் (பொக்கிஷ சாலை) இருந்தது.

6. பல தலங்களில் சுந்தரர் தமக்கு முற்பட்ட நாயன்மார்களைப் பாடியுள்ளனர். அதனால் அவ்வத்தலத்துக் கோவிலில் அவ்வந் நாயன்மார் உருவச் சிலைகள் இருந்திருத்தல் கூடியதே.

7. கோவில்களில் பாடியும் ஆடியும் பக்திசெலுத்திய அடியார் பலர் தலந்தோறும் இருந்தனர்.

இக்கால நாயன்மார். (1) சுந்தரர். (2) சடையனார். (3) இசைஞானியார். (4) நரசிங்க முனையரையர், (5) ஏயர்கோன் கலிக்காம நாயனார், (6) மானக்கஞ்சாறர், (7) பெருமிழலைக் குறும்பர். (8) கோட்புலி நாயனார். (9)

கழற்சிங்கர், (10) செருத்துணை நாயனார். (1) சேரமான்

பெருமாள்.(12) விறல்மிண்டர் (18) சோமாசிமாற நாயனார் என்போர் சுந்தரர் காலத்தில் வாழ்ந்த நாயன்மார் ஆவர்.

திருமுறை ஓதல், சுந்தரர் காலத்திலேயே வட ஆர்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த திருவல்லம் சிவன்

கோவிலில் திருப்பதிகம் ஓதப்பட்டது என்பது கல்வெட் டால் தெரிகிறது. சுந்தரர் காலத்தவரான மானக்கஞ்சாற நாயனார் திருமுட்டம் (ரீமுஷ்ணம்) சிவன் கோவிலில் திருப்பதிகம் விண்ணப்பம் செய்தார் என்று அக்கோவில் கல்வெட்டு கூறுகிறது. திருமுறைகள் நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப்பட்டதற்கு முன்பே எறும்பியூர், பழவூர், ஆவடுதுறை, தவத்துறை (லால்குடி) முதலிய இடத்துச்