பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46 சேக்கிழார்

கோவில்களில் திருப்பதிகங்கள் ஓதப்பட்டன என்பது கல்வெட்டுகளால் அறியக்கிடக்கிறது. இவற்றை நோக்க, நாயன்மார் காலமாகிய பல்லவர் காலத்திலேயே பல கோவில்களில் திருப்பதிகங்கள் ஓதப்பெற்று வந்தன என்பதை எளிதில் உணரலாம்.

நாயன்மார் உருவச்சிலைகள். அப்பர்-சம்பந்தர் காலத்திலேயே, அவர்க்கு முற்பட்ட நாயன்மார் உருவச் சிலைகள் அவர்கள் வாழ்ந்த பதிகளில் இருந்த கோவில்களில் எடுப்பித்துப் பூசை முதலியன வழக்கில் இருந்திருத்தல் வேண்டும் என்று முன் சொல்லப்பட்ட தன்றோ? அதனை உறுதிப்படுத்துவனபோலச் சுந்தரர் காலத்தில் திருநாகேச்வரத்தில மிலாடுடையார்க்குக் (மெய்ப்பொருள் நாயனார்) கோவில் இருந்தமையும், காஞ்சியில் திருக்குறிப்புத் தொண்டர் பூசித்த முத்திசர் கோவில் உண்மையும் கல்வெட்டுகளால் அறிகிறோம். இவற்றால், பல்லவர் காலத்தில் 63 நாயன்மார்களுட் பெரும்பாலார்க்குப் பல கோவில்களில் உருவச்சிலைகள் இருந்திருத்தல் வேண்டும் என்று கோடல் தவறாகாது. இந்தக் கருத்தைச் சுந்தரர் திருத்தொண்டத்தொகை உறுதிப் படுத்தல் காணத்தக்கது. சுந்தரர் திருவாரூரில் உள்ள தேவாசிரிய மண்டபத்தின் முன் திருத்தொண்டத் தொகையைப் பாடினார். அம்மண்டபத்திற் கூடியிருந்த நாயன்மாரைத் தனித்தனியே வணங்கிச் சுந்தரர் பாடினார்’ என்பது சேக்கிழார் கூற்று. 63 நாயன்மாருள் சுந்தரர் காலத்தில் உயிரோடு இருந்தவர் 13 பேர். ஏனைய 50 பேரும் அவருக்குக்காலத்தால் முற்பட்டவர் ஆவர். காலத்தால் முற்பட்ட அவருள் பலர் இரண்டு, மூன்று நூற்றாண்டு கட்கு முற்பட்டவர் அவர்களைச் சுந்தரர் தேவாசிரிய மண்டபத்திற் கண்டு