பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகவுரை

சேக்கிழார் என்னும் திருப்பெயருடன் வெளிவரும் இவ்வாராய்ச்சி நூல், யான் எனது M.O.L. பட்டத்திற்க்காகத் தயாரித்த ஆங்கில ஆராய்ச்சி நூலின் ஒரு பகுதியாகும். சேக்கிழார்,(ஜெர்மன் வரலாற்று ஆசிரியரான வான் ராங்கோ (Van Rankey)சென்ற ஆராய்ச்சி முறைப்படி) (1) நாயன்மார் வாழ்ந்திருந்த தலங்களை எல்லாம் பார்வையிட்டுத் தமிழகம் முழுவதும் கற்றினவர் (2) நாயன்மார் வரலாற்றுக் குறிப்புகளை வல்லார் வாயிலாகவும், பழைய நூல்கள் மூலமாகவும், கல்வெட்டுகள் வழியாகவும் தயாரித்தவர்; (3) பழைய நூல்களைப் பழுதறப் பரிசோதித்துப் (Internal and External Criticism) பொருத்தமான குறிப்புகளை மட்டும் ஏற்றுக் கொண்டவர்; (4) தம் காலத்திருந்த ஒவியங்கள் சிற்பங்கள் - படிமங்கள் - கோவில்கள் முதலியவற்றை நன்றாக பார்வையிட்டுத் தமக்குத் தேவையான குறிப்புகளை மேற்கொண்டவர் என்னும் செய்திகள் ஆராய்ச்சி வல்லார்க்கு நன்கு புலனாகும். கருங்கக் கூறின் இன்று மேனாட்டார் கூறும் சாத்திரீய ஆராய்ச்சி (Scientific Research) முறையின் பல அம்சங்களை கி.பி பன்னிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் பெருமானிடம் கண்டு களிக்கலாம் என்று கூறல் தவறாகாது. இந்நூலின் இக்குறிப்புகள் அனைத்தையும் சுருக்கமாகக் காணலாம்.

யான் 1941-ஆம் ஆண்டு முதல் செய்து வந்த “பெரியபுராண ஆராய்ச்சி” சம்மந்தமான குறிப்புகள் பல இந்நூலிற் குறிக்கப்பட்டுள்ளன. இவ்வாராய்ச்சிக்குறிப்புகள் 1942 முதல் யான் செய்து வந்த பெரியபுராண ஆராய்ச்சிச் சொற்பொழிவுகளில் குறிக்கப் பெற்றுத் தமிழ்ப் பெரும் புலவர் பலரிடம் பாராட்டுப் பெற்றனவாகும். யான், சிவக்கவிமணி