பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோ.க.சுப்பிரமணி முதலியார் B.A. (1942) தமிழ்ப் பெரியார் திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் (1942)தமிழ் ஆராய்ச்சி விரிவுரையாளர்-ரா.பி.சேதுபிள்ளை,B.A.,B.L.,(1943), தமிழ்ப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை B.A.,I.T. (1942) வித்வான் S. ஆறுமுக முதலியார் M.A.,B.O.L.L.T. (1944) தமிழ்ப் பெரியார் T.M.நாராயணசாமிப்பிள்ளைM.A.,B.L., முதுபெரும் புலவராய மறைமலையடிகள்(1944) முதலிய தமிழ்ப் பெரும் புலவர் தலைமையின் கீழ் முறையே இராசமன்னார்குடி, சென்னை, வேலூர்,பழனி, சேலம் முதலிய இடங்களில் பேசிய சொற்பொழிவுகளின் சுருக்கமே இந்நூற் பொருளாகும். யான் M.O.L.பட்டத்திற்குத் தயாரித்த இந்த ஆராய்ச்சிக் குறிப்புகளை நன்கு சோதித்து முறைப்படுத்தி ஒழுங்கு பெறச் செய்த பெரியார் சென்னை பல்கலைக்கழகத் தமழ் ஆராய்ச்சித் துறைத் தலைவராக உள்ள இராவ்சாகிப் S.வையாபுரிப் பிள்ளை, B.A.B.L. அவர்கள் ஆவர். என்னை இவ்வாராய்ச்சித் துறையில் ஊக்கிவந்த இப்பெரியார் அனைவர்க்கும் எனது உளமார்ந்த நன்றியும் வணக்கமும் உரியவாகுக.

இச்சிறு நூல் கல்லூரி மாணவர்க்கும் தமிழ்ப் பொது மக்கட்க்கும் பயன்பட வேண்டும் என்னும் கருத்தினால் மிக எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. ஆராய்ச்சித் துறையில் ஆர்வமுள்ள பெருமக்கள் எனது முயற்சியினை ஆசிர்வதிக்குமாறு வேண்டுகிறேன்.

மா.இராசமாணிக்கம்.

சேக்கிழார் அகம்.
சென்னை.