பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார் 51

ஏராளமான நிபந்தங்கள் விடப்பட்டன. விழாக்கள் சிறப்புற நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. புதிய கற்றளிகள்: சோழப் பேரரசை உண்டாக்கின ஆதித்த சோழன், முதற் பராந்தகன் முதலிய சோழ வேந்தர் தத்தம் பெயர்களைக்கொண்ட புதிய கற்கோவில்களைக் கட்டினர் பழைய கோவில்களைப் புதிக்கினர்.

இராசராச சோழன் பல ஆண்டுகள் உழைத்து எடுத்த தஞ்சைப் பெரிய் கோவிலை அறியாதார் உளரோ? அவன் அக்கோவிலுக்கு விடுத்த மானியம் அளவிடற் கரிய்து தமிழ்நாடு முழுவதிலும் இருந்த கோவில் களிலிருந்து ஆடல் பாடல் வல்ல மகளிர் நானுற்றுவரைத் தஞ்சைப் பெரிய கோவிலில் அமர்ந்தினான். ஒவ்வொரு மகளுக்கும் ஒரு வீடும் ஒரு வேலி நிலமும் மானியமாக விட்டான் 48 பேரை அமர்த்தித் திருப்பதிகம் ஒதச் செய்தான். இங்ஙனம் சோழர் கோநகரான தஞ்சாபுரியில் இராசராசன் எடுப்பித்த பெரிய கோவில் நடுநாயகமாக விளக்கமுற்று இருந்தது. இவ்வரசன் இலங்கை, பழையாறை, திருவலஞ்சுழி முதலிய இடங்களில் புதிய கோவில்களைக் கட்டினான். இவன் மனைவியரும் மக்களும் தமக்கையும் நாடெங்கும் செய்துள்ள சிவப் பணிகள் மிகப் பல ஆகும். •

இராசேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரத்தை உண்டாக்கினான் அதில் கங்கைகொண்ட சோழீச்வரம்.என்ற சிவன் கோவிலைக் கட்டினான். அக்கோவில் வியக்கதகும் வேலைப்பாடு கொண்ட மிகப்பெரிய கோவில்.இராசேந்திரன் மகனான இராசாதிராசன் பல கோவில்களைக் கட்டினான். முதல் குலோத்துங்க சோழன் வேம்பற்றுார், கோட்டாறு, சூரியனார் கோவில் முதலிய இடங்களிற் கோவில்களை எடுப்பித்தான். இவன் மகனான விக்கிரம சோழன் திருமங்கலம், குற்றாலம்,