பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார் 53

மடங்கள். சோழர் காலத்திற் புதிய மடங்கள் பல தோற்றுவிக்கப்பட்டன. ஆயின் சோழர் கல்வெட்டுகளிற் 'புதியன' என்று கூறப்படாமல் சிறந்த நிலையில் இருந்த பழைய மடங்களும் பலவாகும். அவற்றுட் சிறப்பாகக் குறிக்கத் தக்கவை இவையாகும்:


(1) திருப்புகலூர் - நம்பி திருமுருகன் திருமடம், (2) திரு ஆவடுதுறை - திருவீதி மடம், திருநீலவிடங்கன் மடம் முதலியன. (3) திருக்கழுக்குன்றம் - நமிநந்தி அடிகள் மடம், (4) திருவதிகை-வாகிசன் மடம், திருநாவுக்கரசன் திருமடம் (5) திருமுதுகுன்றத்து மடம், (6) திருமங்கலம் - பரஞ்சோதி மடம், (7) திருமணஞ்சேரி - பரசமய கோளரி மடம், (8) திருவையாற்று மடம்

இம்மடங்கள் பலவற்றில் சிவயோகியர், மாவிரதியர், மாகேச்வரர், அடியார், வேதியர், ஆண்டார் முதலியவரை உண்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இவை, பல கலைகளில் வல்ல சமயத் தலைவர்கள் ஆட்சியில் இருந்தன. இம்மடங்கள் தலயாத்திரை செய்யும் அடியவர் தங்கும் இடங்களாகவும், உள்ளதை இறைவன்பால் நிறுத்தி வீடுபேற்றை விரும்பும் முனிவர் தங்கும் அமைதி நிலவிய இடங்களாகவும், மக்கட்குச் சமயக் கல்வி புகட்டும் சமயப் பள்ளிகளாகவும் இருந்து சைவ சமயத் தொண்டாற்றி வந்தன. இவை கோவில்களை அடுத்து இத்தகைய நற்பணிகளில் ஈடுபட்டு இருந்தமையால் சைவ சமயப் பிரசாரம், சமண - பெளத்த சமயப் பிரசாரத்தை விஞ்சி விட்டது. சைவ சமயம் மக்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. - . . -

பலவகை அடியார்கள். 1 மடங்களில் உணவு கொண்ட அடியவருட் சிவயோகியர் ஒரு சாரார்.அவர்கள் சிவபெருமானைச் சிந்தித்தபடியே இருப்பவர் இறக்குந்