பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார் 55

1. திருவதிகைக் கோவிலில் திருநாவுக்கரசர்க்குத் தனிக் கோவில் ஒன்று 'வாகீச்வரம்" என்ற பெயருடன் இருந்தது.

2. குகூர்க் கோவிலில் சுந்தரர்க்குக் கோவில் இருந்தது. அங்குச் சித்திரைத் திருவிழா நடந்தது.

3. செங்காட்டங்குடியில் சிறுத்தொண்ட நம்பி விழா நடைபெற்றது.

4. தஞ்சைப் பெரிய கோவிலில் சண்டீசர்க்குத் தனிக் கோவில் ஏற்பட்டது. பூசை சிறப்பாக நடைபெற்றது. - 5. சண்டீசர் சிவலிங்க பூசை செய்தல் - அவர் தந்தையின் கால் வெட்டுண்டு கீழே விழுதல் - அம்மையப்பர் தோன்றிச் சண்டீகர்க்குச் 'சண்டீசப் பதம்’ தருதல் - இவற்றை விளக்கும் செப்பு உருவச் சிலைகள் தஞ்சைப் பெரிய கோவிவில் எடுப்பிக்கப் பெற்றன.

6. அதே கோவிலில் சுந்தரர், நங்கை பரவையார், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் இவருடைய செப்பு உருவச்சிலைகள் எடுப்பிக்கப்பெற்றன. அவற்றுக்குப் பல ஆடை அணிகள் வழங்கப் பெற்றன.

7. 14 'தத்தா! நமரே காண்' என்ற மிலாடுடையார் படிமம் ஒன்று.அதே கோவிலில் எழுந்தருளப் பெற்றது. 8. அப்பெரிய கோவிலில்,பைரவர். சிறுத்தொண்ட நம்பி, வெண்காட்டு நங்கை, சிராள தேவருடைய செப்பு உருவச்சிலைகள் எடுக்கப் பெற்றன. பல ஆடை அணிகள் வழங்கப்பட்டன.

14 'தத்தா நமரே காண்' என்ற தொடர் மெய்ப்பொருள் நாயனார்

வரலாற்றில் உயிர் நாடியாகும். இதன் விளக்கம் பெரிய புராணத்திற்கு காண்க.