பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56. சேக்கிழார்

9. திருமழபாடிக்கோவிலில் அப்பர், சம்பந்தர். சுந்தரர் திருமேனிகள் வைத்துப் பூசிக்கப்பெற்றன.

10. திருவொற்றியூர்க் கோவிலில் 63 நாயன்மார் உருவச்சிலைகள் எழுந்தருளப் பெற்றன. நாள்தோறும் பூசை செய்வதற்காக 75 கலம் நெல் தரப்பட்டது.

11. திருவாரூர்ப் பூங்கோவிலில் ஆளுடைய நம்பி, பரவை நாச்சியார் இவர்தம் உருவச்சிலைகள் இருந்தன. அவற்றின் பூசைக்காகச் சிற்றுார் ஒன்று தானமாக வசிடப்பட்டது.

12. திருவாமூர்க்கோவிலில் அப்பர் உருவச் சிலையும் சீகாழிக் கோவிலில் சம்பந்தர் உருவச்சிலையும் வைத்தும் பூசிக்கப்பெற்றன.

இங்ஙனம் பல கோவில்களில் நாயன்மார் உருவச் சிலைகள் விளக்கமுற்றன. இவற்றுக்கு நாளும் பூசை நடந்தது. உரிய காலங்களில் விழாக்கள். நடைபெற்றன. இவை கல்வெட்டுகளால் அறியப்படும் செய்திகள். இப்பூசையாலும் விழாக்களாலும் நாயன்மார் வரலாறுகள் தலங்கள்தோறும் பொதும்க்கள் பால் பரவி வந்தன் என்பது தெளிவாகின்ற்தன்றோ?

திருப்பதிகம் ஓதுதல், கோவில்களில் திருப்பதிகம் ஒதுதல் நாயன்மார் காலத்திலேயே இருந்து வந்தது என்பதைச் சென்ற பகுதியிற் குறிப்பிட்டோம் அல்லவா? அப்பழக்கம் சோழர் காலத்தில் மிகுதிப் பட்டது என்பதைப் பல கல்வெட்டுகள் அறிவிக்கின்றன. திரு எறும்பியூர், திருப்பழுவூர், திரு ஆவடுதுறை, திருத்தவத்துறை, திருமுதுகுன்றம், திருவீழிமிழலை, திருநல்லம் திருச்சோற்றுத்துறை. திருமறைக்காடு, திருஆமாத்துார், தில்லை, திருவாரூர் முதலிய பாடல்பெற்ற கோவில்களிலும், பாடப் பெறாத