பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார் 57

பல கோவில்களிலும் திருப்பதிகம் ஒதப்பெற்றது. பிராமணர் முதலிய பல வகுப்பாரும் திருப்ப்திகம் ஒதலில் ஈடுப்பட்டிருந்தனர் என்று கல்வெட்டுகள் குறிக்கின்றன. திருஆமாத்ததூர்க் கோவிலில் குருடர் பதினாறு பேர் நாளும் மும்முறை திருப்பதிகம் ஒதிவந்தனர். திருவொற்றியூர்க் கோவிலில் திருப்பதிகம் ஒதப் பதினாறு தேவரடியார் இருந்தனர். தில்லையில் மாசி மாதத் திருவிழாவில் திருத்தொண்டத் தொகை பாடப் பெற்றது. இராசேந்திரன் ஆட்சிக் காலத்தில் 'தேவார நாயகம்'என்றோர் அரசியல் 'உத்தியோகஸ்தன் இருந்தான். அவன் சோழ நாட்டுத் தேவாரப் பள்ளிகளையோ அல்லது கோவில்களில் தேவாரம் ஒதுவார்களையோ கவனிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தான் போலும்!

ஆடல் - பாடல். தஞ்சைப் பெரிய கோவிலில் இசைக் கலையையும் நடனக் கலையையும் வளர்க்க 400 பதியிலார் இருந்தனர். அவர் அனைவரும் தமிழ்நாட்டுப் பல கோவில்களிலிருந்து வரவழைக்கப்பட்டனர் என்று இராசராசன் கல்வெட்டு கூறுகிறது. இதனால் தமிழ் நாட்டுக் கோவில்கள் பெரும்பாலானவற்றுள் இசை-நடனக் கலைகள் நன்முறையில் வளர்ச்சி பெற்று வந்தன என்பது வெள்ளிடை மலைபோல விளக்கமாகிறதன்றோ?

கோவில்களில் படிக்கப்பெற்ற நூல்கள்.பல்லவர் காலத்தில் பாரதம் சில கோவில்களிற் படித்து மக்கட்கு விளக்கப்பட்டதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. அங்ஙனமே சோழர் காலத்தில் பாரதம் இராமாயணம் பிரபாகரம், சிவ தருமம், இராசராச விசயம் என்பன கோவில்களில் படித்து விளக்கப் பெற்றன. நீடுர்க் கோவிலில் 'புராண நூல் விரிக்கும் புரசை மாளிகை’ என்று ஒரு மாளிகை இருந்ததை நோக்கக் கோவில்களில்