பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58 சேக்கிழார்

புராண நூல்களும் படித்து விளக்கப்பட்டன என்பதை அறியலாம். நரலோகவீரன் செய்த திருப்பணிகள். நரலோக வீரன் என்பவன் முதல் குலோத்துங்கன் தானைத் தலைவருள் ஒருவன் தொண்டைநாட்டு மணவிற் கோட்டத்து அரும்பாக்கம் என்ற ஊரினன். இவன் சிறந்த சிவபக்தன். இவன் பல கோவில்களுக்குப் பலவகை அறங்கள் செய்துள்ளான்; அவற்றுள் சிதம்பரம் கோவிலுக்கும் திருவதிகைக் கோவிலுக்கும் இவன் செய்த திருப்பணிகள் குறிக்கத்தக்கவை. இவன் சிதம்பரத்திற் செய்த பல திருப்பணிகளில் சிறந்தவை-(1) தில்லைவாழ் அந்தணர்க்கு ஏராளமாகப் பொருள் உதவிசெய்தமை, (2) சம்பந்தர் தேவாரத்தை ஒதுவதற்கென்று அழகிய மண்டபம் ஒன்றை அமைத்தமை, (3) மூவர் தேவாரத்தையும் செப்பேடுகளில் எழுது வித்தமை என்பன. இப்பெருமகன் (1) திருவதிகை வீரட்டானத்தில் திருநாவுக்கரசர்க்குத் தனிக்கோவில் கட்டினான். (2) திருநாவுக்கரசர் திருமடத்திற்கு 48 ஆயிரம் குழி நிலத்தைத் தானம் செய்தான்.

திருக்கைக்கோட்டி இது கோவிலில் உள்ள ஒரு மண்டபம். இதனில் தேவார ஏடுகள் படிக்கப்படும்: எழுதப்படும் புதுப்பிக்கப்படும் திருமுறைகள் பூசிக்கப் பெறும். இப் பணிகளைக் செய்து வந்தவர் தமிழ் விரகர் என்பவர். இவர்க்கு மானியம் உண்டு. இத்தகைய மண்டபங்கள் தில்லை. சிகாழி முதலிய இட்த்துக் கோவில்களில் இருந்தன என்று கல்வெட்டுகள் குறிக்கின்றன. இக்கல்வெட்டுச் செய்திகளைக் காண்கையில், சேக்கிழார்க்கு முன்பே தேவாரப் பதிகங்கள் செப்பேடுகளில் எழுதப்பட்டுவிட்டன. திருக்கோவில்களில் தேவார ஏடுகள் வைத்துப் பூசித்துப் பாதுகாக்கப் பெற்றன என்பன வெளியாகின்றன அல்லவா?