பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோழர் கால இலக்கியம்



சென்ற பகுதியிற் பல்லவர் கால இலக்கியமாகிய தேவாரத் திருமுறைகளைப்பற்றி ஆராயப்பட்டது. அவை நாயன்மார் வரலாறுகள் அறியப் பேருதவியாக இருப்பவை என்பது விளக்கப்பட்டது. அவை போலவே சோழர் காலத் திருமுறைகளாக விளங்குபவை - நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப்பட்டனவாகக் கருதப்படும் 8.9.10. 11-ஆம் திருமுறைகள் - முதல் இடம் பெறத்தக்கவை.

எட்டாந் திருமுறையாகிய திருவாசகம் கண்ணப்பர். சண்டீசர் இவ்விருவரது பக்திச் சிறப்பையே விதந்து பேசுகிறது. ஒன்பதாந் திருமுறையில் சண்டீசர், கண்ணப்பர். கணம்புல்லர், அப்பர், சம்பந்தர். தில்லைவாழி அந்தணர் இவர்தம் சிறப்புகள் குறிக்கப்பட்டுள. பத்தாந்திருமுறையில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் இல்லை. ஆயினும், கோவில் அமைப்பு முதலிய பக்தி மார்க்கத்தின் இயல்கள் அனைத்தும் மூவாயிரம் பாக்களில் விளக்கப்பட்டுள்ளன. பதினோராந் திருமுறையில் (1) காரைக்கால் அம்மையார் பாடிய பாக்களில் அவரைப்பற்றிய குறிப்புகள் சில கிடைக்கின்றன. (2) இன்று 24 வெண்பாக்களுடன் சிதைந்த நூலாகவுள்ள ஐயடிகள் காடவர்கோன் பாடிய க்ஷேத்திர வெண்பா, சேக்கிழார் காலத்தில் முழு நூலாக இருந்திருக்கலாம். அதிலிருந்து அந்நாயனார் வரலாறு, கோவில்களின் சிறப்பியல்புகள் முதலியன சேக்கிழார் அறிய வசதி இருந்தது என்னலாம். (3) சேரமான் பாடிய பொன்வண்ணத்து அந்தாதியின் ஈற்று வெண்பாவில் () சுந்தரர் வெள்ளானை மீது கயிலை சென்றமை, (ii) சேர்மான் குதிரைமீது கயிலை சென்றமை, (iii) சேரமான் கயிலையில் ஆதியுலாவை அரங்கேற்றினமை, தில்லையில் பொன் வண்ணத்து அந்தாதியைப் பாடினமை என்ற குறிப்புகள் காண்கின்றன. (4) நக்கீரர் பாடிய பாக்களில் சண்டிசர், சாக்கியர்,