பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார்

65

கோச்செங்கணான், கண்ணப்பர் வரலாறு விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. (5) கல்லாடர் பாட்டில் கண்ணப்பர் வரலாறு தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. (6) பட்டினத்தடிகள் பாக்களில் சண்டீசர், சிறுத்தொண்டர், சம்பந்தர், சாக்கியர், சுந்தரர்' இவர்தம் பக்திச் சிறப்பு பாராட்டப்பட்டுள்ளது. (7) இவை யாவற்றினும் மேலாகத் திருமுறைகள் தொகுத்த நம்பியாண்டார் நம்பி பாடிய நூல்களே சேக்கிழார்க்குப் பெருந்துணை புரிந்தன என்று துணிந்து கூறலாம். நம்பி, சம்பந்தரைப்பற்றி ஆறு நூல்கள் பாடியுள்ளார். அவற்றிற் சம்பந்தர் வரலாற்றுக் குறிப்புகள் அனைத்தும் தெளிவாகக் குறித்திருக்கிறார். அப்பரைப் பற்றி ஒரு நூல் பாடியுள்ளார். அதனில், அப்பரைப் பற்றிப் பல செய்திகளை விளக்கியுள்ளார். இவர் நாயன்மார் அறுபத்துமூவர் மீதும் பாடிய 'திருத்தொண்டர் திருவந்தாதியே மிகவும் இன்றியமையாதது. அது சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையை முதலாகக்கொண்டு ஒரளவு விளக்கமாகப் பாடப்பட்டது. அதனில் சுந்தரர், வரலாறு 18 பாக்களிற் குறிக்கப்பட்டுள்ளது. ஆத்லின், இது பெரிய புராணத்திற்குப் பேருதவி புரிந்த மூல நூல்களில் முதல் இடம் பெற்றது என்னலாம்.

கல்வெட்டுகளிற் கண்ட நூல்கள்

சேககிழார்க்குக் காலத்தால் முற்பட்ட சோழர் காலத்து நூல்கள் சில, சமயத் தொண்டிற்காகச் செய்யப்பட்டன என்று கல்வெட்டுகள் குறிக்கின்றன. அவற்றுட் சிறந்தவை - (1) இராசராச விசயம், (2) இராச இராசேச்வர நாடகம், (3) கன்னிவன புரணம், பூம்புலியூர் நாடகம் என்பன.

1. இராசராச விசயம்: இந்நூல் திருப்பூந்துருத்திக் கோவிலிற் படித்துக் குடிமக்களுக்கு விளக்கப்பட்டது. இதனில், இராசராசன் பெற்ற வெற்றிகள் சமயத்