பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் .இராசமாணிக்கனார்

[] 67



கரையேறி, அவ்வூர்ச் சிவன் கோவிலை அடைந்து பதிகம் பாடினார்.

அரசன் அப்பரது திருத்தொண்டின் உறைப்பை உள்ளபடி அறிந்து சைவன் ஆனான். பாதிரிப்புலியூரில் இருந்த சமணக் கட்டடங்களை இடித்தான்; அச்சிதைவுகளைக் கொண்டு திருவதிகையில் தன் பெயரால் 'குணபர ஈசவரம் என்ற கோவிலைக் கட்டினான்.

இவ்வரலாற்றுக் குறிப்புகள் அனைத்தும் திருப்பா திரிப்புலியூரை நடுநாயகமாகக் கொண்டு நிகழ்ந்தவை. ஆதலின், இவை கன்னிவன புராணத்துள் பல படலங்களாகப் பிரிக்கப்பட்டு விரிவாகக் கூறப்பட்டிருக்கலாம். . இங்ங்னமே பூம்புலியூர் நாடகத்துள்ளும் இவை பல காட்சிகளாக விளக்கம் பெற்றிருக்கலாம் என்று நினைத்தல் தவறாகாது.

4. புராண நூல்கள்: கோவில்களில் புராணங்கள் படித்துக் குடிகட்கு விளக்கிக் கூறும் வழக்கம் சோழர் காலத்தில் இருந்தது. 'புராண நூல் விரிக்கும் புரிசை மாளிகை ஒன்று நீடூர்க் கோவிலில் இருந்தது என்பதை நோக்க, இவ்வுண்மை நன்கு புலனாகும். இதனால், இந்நாட்டில் சேக்கிழார்க்கு முன்பே, சைவ சமய சம்பந்தமான புராணங்கள் சிலவேனும் இருந்திருத்தல் வேண்டும்; அவை சிவன் கோவில்களிற் படித்து விளக்கப்பட்டனவாதல் வேண்டும் என்ற செய்தி தெளிவுறத் தெரிகிறதன்றோ? -

தில்லை உலா. இது சேக்கிழார்க்கு முற்பட்டதாகக் கருதத் தக்கது. இது முழுவதும் கிடைக்கவில்லை. கிடைத்த அளவு “தமிழ்ப் பொழில்’ மாத வெளியீட்டில் வந்தது. இதனை வெளியிட பெரியார் பண்டிதர் - உலகநாத