பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68 - சேக்கிழார்

பிள்ளை ஆவர். இதனில் 'திருநீற்றுச் சோழன் எனப்பட்ட முதற். குலோத்துங்கன் படிமம் நடராசப் பெருமானது உலாவிற் கலந்து கொண்டது என்பதால், அவனுக்குப் பின் செய்யப்பட்ட நூல் என்று திட்டமாகக் கூறலாம். ஆயின், தில்லையில் விக்கிரம சோழனோ, இரண்டாம் குலோத்துங்கனோ செய்த திருப்பணிகள் சிறப்பிடம் பெறாமையாலும், சைவ உல்கம் போற்றும் பெரிய புராணம் தில்லையிற் செய்யப்பட்டதைக் கூறாமையானும் - இந்நூல் சேக்கிழார்க்கு முற்பட்ட தெனத் திண்ணமாகக் கூறலாம்.

இதனிற் கூறப்பெற்ற செய்திகள்.கூத்தப் பெருமான் உலாப்போகையில் அப்பர், சம்பந்தர், சுந்தரர், சேரமான் பெருமாள், மாணிக்கவாசகர், வரகுண பாண்டியன், சண்டீசர் இவர்தம் உருவச்சிலைகளைக் கொண்ட தேர்கள் உடன் சென்றன. இவர்கட்குமுன், திருமுறை ஏடுகள் கொண்டு செல்லப்பட்டன. இந்நூலில் (1) சிவன், சுந்தரர்க்கும் பரவையார்க்கும் இடையே தூது சென்றமை, (2) கோட்புலி நாயனார் பிள்ளையை வாளால் துணித்தமை, (3) சிறுத்தொண்டர் பிள்ளையைக் கொன்று விருந்திட்ட முழு விவரம், (4) சம்பந்தர் சைவத்தைப் பரப்பப் பாண்டிய நாடு சென்றமை என்பன குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுள் முதல் மூன்று விவரங்களும் இன்று கிடைத்துள்ள வேறு நூல்களிற் கூறப்படாதவை. எனவே, இவை பெரிய புராணத்திலும் காணப்படுகின்றன எனின், சேக்கிழார் இவ்வுலா நூலையும் இதுபோன்ற தம் காலத்து வேறு நூல்களையும் பார்த்திருத்தல் வேண்டும் என்று கொள்ளுதல் பொருத்தமே அன்றோ?

சோழர் காலத்திற் சமண சமய நிலை. சமண சமயக் கொள்கைகளை நன்கு விளக்கிக் கூறும் நூல்கள்ான நீலகேசி, சிந்தாமணி என்ற இரண்டில் முன்னது சோழர்க்கு