பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேக்கிழார்

84

யாத்திரை செய்யின் அவ்வழி அமைப்பும் வழி நெடுகவுள்ள காட்சிகளும் சேக்கிழார் கூற்றோடு பெரும்பாலும் ஒத்திருத்தலைக் காணலாம். "சேக்கிழார் கூறியுள்ள யாத்திரை வழி அவர் காலத்திருந்த வழியாகும். ஆனால், அவ்வழியே ஏறத்தாழ, கி.பி.7ஆம் நூற்றாண்டில் அப்பர் கால்த்திலும் இருந்ததெனக் கோடலில் தவறில்லை.'வடுக வழி மேற்கு, வடுக வழி கிழக்கு' என்ற பெரிய பாதைகள் தமிழ் நாட்டிற்கும் ஆந்திர நாட்டிற்கும் தொடர்பை உண்டாக்கி இருந்தன. அப்பர் போன்ற யாத்திரிகர்க்குரிய பெருஞ்சாலைக்ள் நாடெங்கும் இருந்திருத்தல் வேண்டும் என்பது 7,8ஆம் நூற்றாண்டுகளிற் செய்யப்பட்ட நூல்களைக் கொண்டும் ஊகிக்கலாம்.”

3.திருக்குறிப்புத் தொண்டர் புராணத்திற் கூறப் பட்டுள்ள குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் திணைகளைப்பெற்ற தொண்டை நாட்டு வருணனை கூர்ந்து கவனிக்கத் தக்கது. குறஞ்சியும் முல்லையும் மயங்குதல், முல்லையும், மருதமும் மயங்குதல், குறிஞ்சியும் நெய்தலும் மயங்குதல் போன்ற திணைமயக்க வகைகள், ஒவ்வொரு நிலத்திலும் அமைந்துள்ள சிறப்புடைய கோவில்கள், ஊர்கள். அவ்வூர்களைப்பற்றிய வரலாற்றுச். செய்திகள் முதலியன ஏறக்குறைய 46 செய்யுட்களில் விளக்கப்பட்டுள்ளன. காட்டுப்பாடி, மகாபலிபுரம், திருமுல்லைவாயில் போன்ற இடங்களை நேரிற் கண்டவர் இவ்வருணனையைப் படிப்பாராயின், சேக்கிழார் தொண்டை நாடு முழுவதும் நன்கு சுற்றி மூலை முடுக்குகளையும் கவனித்த நில அமைப்பு நிபுணர் என்பதை, எளிதில் அறிதல் கூடும்.


'Dr. S.K. Aiyangar - 'Manimekalai in its Historical Setting', p.46