பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார்

91

நாயன்மார் மரபுகள்:நம்பியாண்டார் நம்பி தமது திருத்தொண்டர் திருவந்தாதியில் ஏறத்தாழ 35 நாயன்மார்க்கு மரபு குறித்திலர். ஆயின், சேக்கிழார் அவருள் ஏறக்குறைய 27 நாயன்மார்க்கு மரபு குறித்துச் சென்றனர். இஃது அவரால் எங்ங்ணம் இயன்றது? அவர் தமது தல் யாத்திரையில் அந்தந்தத் தலத்தில் வாழ்ந்த வல்லார்வாய்க் கேட்டுணர்ந்த குறிப்புகள் கொண்டே இது கூற முடிந்தது எனக் கோடல் பொருத்தமே ஆகும்.

புதிய செய்திகள்.பதினொரு திருமுறைகளிலும் பிற நூல்களிலும் கூறப்பெறாத பல செய்திகள் பெரிய புராணத்துட் காண்கின்றன. அவற்றுட் சிறப்பாகத் (1) திருநீலகண்டர் இளமை துறந்த வரலாறு, (2) நந்தனார் செய்த திருப்பணிகள், (3) சாக்கியர் காஞ்சியில் சிவனைப் பூசித்து முத்தி பெற்றமை (4) சுந்தரர் - சங்கிலியார் திருமணம் என்பன குறிக்கத் தக்கவை. இத்தகைய செய்திகள் பலவற்றை நோக்கச் சேக்கிழார் தமது தல யாத்திரையின்போது இவற்றைத் தக்கார் வாயிலாகக் கேட்டறிந்தனராதல் வேண்டும் என்று நினைக்க இடமுண்டாகிறது.

சண்டீசப் பதம்.இதனைக் குறிக்கும் கங்கை கொண்ட சோழபுரத்துச் சிற்பத்தைப்பற்றிச் சென்ற பகுதியிற் கூறப்பட்டதன்றோ? இறைவன். உமையம்மை யாருடன் அமர்ந்து, தமது மடித்து ஊன்றிய வலக்காலின் அடியில் சண்டீசரை அமரவைத்து, தாம் சூடியிருந்த கொன்றை மாலையை எடுத்து அவரது முடி மீது சூட்டிச் சண்டீசப் பதம் அருளும் நிலையை உணர்த்தும் இச்சிற்பம் கருத்துன்றிக் கவனிக்கத் தக்கது.இதற்கு வலப்பக்கம் கணநாதர் ஆடிப்பாடிக் களிக்கின்றனர். இடப்பக்கம் பசுக்கள் (வேதங்களின் அறிகுறி) நிற்கின்றன.இச்சிற்பம்