பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

சேக்கிழார்

சேக்கிழார்க்கு முற்பட்டதென்பது சென்ற பிரிவில் விளக்கப்பட்டது. இம்மூன்று நிலைகளையும் ஒருங்கே பெற்ற சண்டீசப்பதச் சிற்பம் ஒரு பக்கமும், சண்டீசப் பதத்தை விளக்கும் சேக்கிழார் பாக்களை ஒரு பக்கமும் வைத்துப் பார்ப்பது நல்லது.

"அண்டர் பிரானும் தொண்டரதமக் கதிய னாக்கி, 'அனைத்து நாம் உண்ட கவமும் உடுப்பனவும் சூடு வனவும் உனக்காகச் சண்கசனுமார் பதிந்தத்தோம்'என்றங் கவர்பொர் தடமுடிக்குதி துண்ட மதிசேர் சடைக்கொன்றை மாலை வாங்கிச் சூட்டினார்.

"எல்லா வுலகும் ஆர்பெடுப்ப எங்கும் மலாமா ரிகள் பொழியப் பல்லா விரவர் கணநாதர் பாடி ஆடிக் கணிபயிலச் சொல்லார் மதைகள் துதிசெய்யச் சூழ்பல் லியங்கள் எழச்சைவ நல்லா(று) உங்க தாயகமார் தங்கள் பெருமான் தொழுதணைந்தார்.

முதற் செய்யுள், இறைவன் சண்டீசர் முடியில் கொன்றை மாலை சூட்டுவதைக் குறிப்பது. இரண்டாம் செய்யுள் சண்டீசப்பதம் கண்ட உலகத்து உயிர்கள் நிலையை விளக்குவது: (1) எல்லா உலகத்தாரும் ஆரவாரித்து, மலர்மாரி பொழிந்தனர்; (2) கணநாதர் பாடி ஆடிக்களித்தனர்; (3) மறைகள் துதி செய்தன (4) பல்லியங்கள் ஒலித்தன. இவற்றுள் கணநாதர் கூத்தும் மறைகளும் (பசுக்கள் வடிவில்) சிற்பங்களாகக் காட்டப்பட்டுள்ளன.

இராசேந்திரன் காலமுதல் சோழப் பேரரசு வீழ்ச்சியடையும் வரை, சோழர் தலைநகரமாக இருந்த சிறப்பு கங்கை கொண்ட சோழபுரத்திற்கே உண்டு. ஆதலின், சேக்கிழார் காலத்திலும் அதுவே தலைநகரமாக இருந்தது என்பது தெளிவு. சோழர் முதல் அமைச்சராக இருந்த சேக்கிழார். நாளும் இக்கங்கை கொண்ட சோழிச்சரத்தைத் தரிசித்திருந்தமை இயல்பே. அங்குள்ள சண்டீசப்பதச் சிற்பம்